நல்லாத்தான் இருக்கினம்(றம்)

நேற்றுத்தான் எங்கடை குட்டிக்கு பிறந்த நாள்
அதுக்கு யாழ்ப்பணத்திலைனிருந்து வந்த
எங்கடை அண்ணாவும் வந்தாரவர் முத்தான சிரிப்போடை
முத்தான சிரிப்பெண்டால் அழகு இவரிடம் அடிமை(முருகு் இவரிடம் அடிமை)

என்ன அண்ணை கொஞ்சம் வத்திப்போனீங்க எண்டால்
அது மனுசியின்ரை ஓடராம்(order)
வளைகுடாவுக்கு போனதாலை எங்கடை வளவை சுத்தி மதில் கட்டியாச்சு
ஆனால் உங்கடை உடம்பு கொஞ்சம் ஏத்திப்போட்டுது எண்டு
மனுசி கற்பூரச்சட்டி எடுத்ததாலை நான் இப்ப உடம்பை குறைச்சுப்போட்டன்,

அதுக்கு மனுசி பின்னங்காணிக்குள்ளை கிடந்த
தேசிக்காயை பொறுக்கி நெல்லியடி சந்தைக்குள்ளை
விற்கச்சொன்னாள்
கத்தி கத்தி வித்ததிலை குரல் நாணும் அறுந்து போச்சு
உடம்பும் குறைஞ்சு போச்சு
எண்டு அவர் சொல்லி முடியவில்லை.........


அண்ணையிட்டை அடுத்த கேள்வி
கோயில் வளவு எல்லாம் என்ன மாதிரி?!!!!!!!!!!!!!\
கோயிலின்ரை கேணியும் கட்டி முடியுது
கங்கா மாமாக்கு போண் நம்பர் குடுத்தனான்
கதைச்சவரோ தம்பி எண்டார்
நான் கதையை மாத்திப்போட்டன்’

அண்ணை கோயில் மடத்தின்ரை கூரை ஓடு உடைஞ்சதாமெல்லோ
என்ன அண்ணை?
பக்கத்து காணி பனையிலை இப்ப பனங்காயும் வருகுதோ?
எண்ட ஆச்சரிய கேள்வி எண்ட எனக்கு.


கனடாவிலையிருந்து மடம் கட்ட வந்தவருக்கு
பத்திக்கொண்டு கோவம் வந்திட்டுது,
ஆனால் என்ன செய்ய
சத்தம் போட்டு பேச காணிக்காரருக்கு கேட்குமே
அவை லண்டனிலை எல்லே..........
எப்படிக்கேட்கும்?

அதை சொல்லி போட்டு என்னை பார்த்துக்கேட்டார்
எப்ப தம்பி உனக்கு கல்யாணம் எண்டு
பொண்ணு ரெடியாக எனக்கு கல்யாணம் எண்டு
மெல்லவா நான் சொல்ல
எங்கடை பிறந்த நாள் குட்டியின்ரை அப்பாவுக்கு
கொடுப்புக்கை சிரிப்பு
நானும் சிரிக்க எல்லாருக்கும் சிரிப்பு.

ஆனால் தம்பி ஊரிலை எல்லாரும் பரவாயில்லை’
நல்லாத்தான் இருக்கினம்
நீங்களும் எப்படித்தம்பியவை
நல்லாத்தானே இருக்கிறீங்க எண்டு கேட்க அண்ணை
அதுக்கு விடை தெரியாத முகம் எனக்கு?

0 comments: