வலைப்பூக்களில் த.அகிலனின். ‘’கனவுகளின் தொலைவு’’(மலர்-18)

தினக்குரல் வாரமலர் ''வலைப்பூக்களில்'' இந்த வாரம் 18வது மலராக த.அகிலன் அவர்களின் ‘’கனவுகளின் தொலைவு’’ என்ற வலைப்பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே பார்வையில் '''8 வலைப்பூக்கள்"

ஒரே பார்வையில் "8 வலைப்பூக்களை" தர முயற்சி செய்துள்ளேன்.சில பூக்களை பிரதி செய்த நண்பன் மாயாவிற்க்கு எனது நன்றிகள்.

(1) ( 2)

(3)

(4)
(5)


(6)
(7)
(8)

வலைப்பூக்களின் 17வது மலர் (04-05-2008)

தினக்குரல் வாரமலர். வலைப்பதிவாளர்களையும் அவர்களின்
பதிவுகளையும் ''வலைப்பூக்கள்'' பகுதி ஊடாக அறிமுகம் செய்து
வருகின்றது.
அந்த வகையில் 17வது மலர்ராக றஸ்மினின் ‘’எனது பார்வை’’
என்ற வலைப்பதிவு இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனது நன்றிகள்.
திரு.பாரதி அவர்கள்.
பிரதமஆசிரியர்
தினக்குரல் வாரமலர்

உதவி ஆசிரியர்கள்
ஆசிரியர் பீடம்
தினக்குரல் வாரமலர்

கணனி உத்தியோகத்தர்கள்
கணனி பிரிவு
தினக்குரல் வார மலர்

இந்த வாரம் வலைப்பூக்களில் ''காண்டீபனின் இயற்கை''

தினக்குரல் வார மலர் '' வலைப்பூக்களின்'' 16 வது மலர் இதுவாகும்.

சென்ற வார வலைப்பூக்களில் ''பஹீமாஜஹானின் கவிதைகள்''

சென்ற வாரம் ''தினக்குரல் வாரமலரில்'' வலைப்பூக்கள் பகுதியில் இவரின் வலைப்பதிவு மலர்ந்துள்ளது.


1990களில் எழுத்துதுறைக்குள் நூழைந்த பஹீமா அவர்கள். இது வரைக்கும் பல கவிதைகளை எழுதியுள்ளார். குருநாகல் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஒரு கணித ஆசிரியர்ராக பணியாற்றும் இவரின. கவி ஆற்றலை வெளிப்படுத்தும் முகமாக (ஒரு கடல் நீரூற்று) என்ற நூல் அமைந்தது. சஞ்சிகைளில் மட்டும் எழுதி கொண்டிருந்த இவர் தற்போது வலைப்பதிலும் தனது கவிதைகளை பதிவு செய்ய தொடங்கியுள்ளார்.

போட்டி போட்டுகொண்டு இவரின் கவிதைகளை பிரசுரம்செய்யவும் ,தங்களின் இணையதள சஞ்சிககைகளிலும் பதிவு செய்யவும் விருப்பம் கொண்ட இலக்கிய கூட்டத்துக்குள் முழுமையாக சிக்காமல் தனது தனித்துவான பதிவாக அமைய வேண்டும் என்ற விருப்பில் இவர் தனக்கேன ஒரு வலைப்பதிவை உருவாகியது மிகவும் பாரட்ட கூடிய விடயமாகும்.

இவரின் கவிதைகளை படிக்கும் போது. தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகின்றது. இவர் பதிவு செய்துள்ள சில கவிதைகளின் பகுதிகளை தருகின்றேன்.

ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி
கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும்
மாலைப் பொழுதொன்றில்
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி.
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.
நானும் தொடர்வேன்இ
தோட்டத்து ஒற்றையடிப் பாதையின் சருகுகளைச்
சிறு மண் வெட்டியால் இழுத்தவாறு
அவள் பின்னே

இவரின் இக் கவிதையை படித்த எனக்கு இவரின் ஆரம்ப பதிவுகளையும் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ''கோழிக்குஞ்சு ''என்ற கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சின்னஞ் சிறு வெண் சிறகிரண்டிலும்
புழுதி படியலாயிற்று:
பஞ்சு போன்ற அதன் உடலம்
ஒடுங்கிச் சிறுத்திற்று:
கூடி விளையாடிய அவளது பாதம்
தவறுதலாகக் குஞ்சின் தலை மீதேறியது:
கால்களும் உடலும் நெடுநேரம் நடுங்கிடச் சிறுமி
தனது பிரியம் துடிப்பதைப் பார்த்திருந்தாள்!
கரு முகிலே! உன் துளிகள் தூவி
அதன் மேனிக்கு வலுவூட்டு!
நீல விசும்பே!உன் குரல் கொண்டு
மீளாத் துயிலிலிருந்து அதையெழுப்பு!
வீசும் பவனமே!உனது மென் கரங்களால்
மூடிய இரு கண் மூடிகளைத் திறந்து விடு!
இனிய குஞ்சே ! வலிகளைக் காலடியில் விட்டு
குணமடைந்து எழுந்து விடு:
முறையிட்டாள் சிறுமி ஆகாயம் நோக்கி.

உயிர் பிழைத்த குங்சு
ஒரு கண் பார்வையிழந்து தவித்தது!
இடையில் தவறிய வழி தேடிக் கீச்சிட்டவாறு
எங்கோ எங்கோ பார்த்திருந்தது


மரணத்தின் நிழல் அதன் தலைக்கு மேலே
கவிழ்திருந்த காலைப் பொழுதில்
கடும் பிரயத்தனத்துடன் ஒரு சொண்டுத் தண்ணீரை
அண்ணாந்து குடித்தது
உலகில் அதற்கென ஆண்டவன் வைத்திருந்த
கடைசி நீர்த் துளி அது!

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!

இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!


இக் கவிதையை படித்து விட்டு உங்களின் கருத்தை பஹீமாவிடமே சொல்லுங்கள்.இன்னுமொர் கவிதை இக்கவிதையை பற்றி பேச எனக்கு தகுதியுண்டா என்று தெரிய வில்லை. நீங்களே படித்து பார்ங்கள்.

ஆண்களை மயக்கும்மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டீச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்இபிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!

உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!

நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!

எனவே கவிதை என்றால் இப்படிதான் இருக்க வேண்டும். என்று கூறும் போது பஹீமா வின் இந்த பதிவை சுட்டிக்காட்டலாம்.


இவரின் வலைப்பதிவை பார்வையிட -
www.faheemapoems.blogspot.com/

கிருஷ்ணி ஜெயநாயகத்தின் ''கல்லறையில் காதல்''நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் யாழ்ப்பாணத்து சொல் வழக்கில் அமைந்த வானொலி நாடகம் ஒன்றை ரசிக்க முடிந்தது.

சிறுவயதில் இருந்து இலங்கை வானொலி தமிழ்சேவையில் ஒலிபரப்பாகும் அனைத்து நாடங்களையும் கேட்க்கும் சந்தர்ப்பம் நிறையவே கிடைத்தது. குறிப்பாக இலங்கை வானொலியில் சனிக்கிழமைகளில் இரவு 9.30மணிக்கு ஒலிபரப்பாகும். ஆராலியர் ந.சுந்தரம்பிள்ளை , எஸ் எஸ்.கணேசபிள்ளை ஆகியோரால் எழுதப்பட்ட யாழ்பாணத்து சொல் வழக்கில் அமைந்த நாடங்களை கேட்டு விட்டுதான் நித்திரைக்கு செல்வது வழக்கம்.

தற்போது புதிய வானொலிகளின் வருகையால் நான் முன்னர் ரசித்த நாடங்களை இப்போது ரசிக்க முடிவதில்லை என்று சொல்லாம். இருந்தாலும் பழைய நாடக நினைவுகளை நினைக்கும் போதெல்லாம். எனது கையிருப்பில் இருக்கும் வானொலி நாடக ஒலிபேழைகளை மீண்டும் ஒரு முறை கேட்டு ரசிக்க தவறுவதில்லை.

ரசிகர்களின் மனங்களில் குடிகொண்ட வரணியூரானின் ''அசட்டுமாப்பிள்ளை'' கே.எஸ். பாலச்சந்திரனின் ''வாத்தியார் வீட்டில்'' பாகம் 1,2,3 , ''அண்ணை றைற்'' புளுகர் பொன்னையா, போன்று இன்றைய இளம் படைப்பாளிகளால் நாடக ஒலிபேழைகள் வெளிவரவேண்டும் என்று எனது நீண்ட நாள் விருப்பம்.
எனது எதிர்பார்ப்புக்கும் நாடக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் முற்று புள்ளி வைத்திருக்கின்றது. இலங்கை தமிழோசை இணைய தள வானொலி. தனது ஒரு வயதினை நோக்கி செல்லுகின்ற இந்த இணைய தள வானொலி தன்னை விரிவுபடுத்தும் நோக்கில். ''இஸ்லாமிய'' நிகழ்ச்சியை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வை ''கொழும்பு தமிழ்ச் சங்கத்தில''; நடாத்தியது.

இந்த நிகழ்வில் வெளியீட்டு வைக்கப்பட்ட இறுவெட்டு தான். ''கல்லறையில் காதல்'' இளம் படைப்பாளியான கிருஷ்ணி ஜெயநாயகத்தின் எழுத்து வடிவில் உருவான இந்த வானொலி நாடகத்தை திரு. ஏ.எம்.கணேஷ் தயாரிக்க திரு. சோமு குணசீலன் இயக்கியுள்ளார். இந்த நாடகத்தின் பின்னணி இசையை திரு. கிருஷ்ணபிள்ளை துஷியந்தன் வழங்கியுள்ளார்.

கிராம புறத்தை மையமாக வைத்து அங்கு வாழ்கின்ற இளம் காதல் உள்ளங்களின் இடையே நிகழ்கின்ற சம்பவத்தை நாடக வடிவில் கொண்டு வந்துள்ளார் நாடக ஆசிரியர்.

சிறிய வயதில் இருந்து அந்த கிராமத்தில் இருக்கின்ற ''சஞ்சய்'' என்கின்ற இளைஞனை காதலிக்கின்றாள் சாந்தி. தொழில் தோடி ''லண்டன்'' செல்லுகின்ற காதலன் ''சஞ்சய்'' தாய் நாடு திரும்பும் வரை தனது காதலை கட்டி காத்திக்கின்ற காதலி சாந்தியின் உணர்வுகள் கிராமத்து காதலுக்கு ஒரு வெற்றி என்று சொல்லாம்.

இவர்கள் இருவர்க்கு இடையே இருப்பது. காதலா? அல்லது ஒரு தலைக் காதலா? ஏன நாடக ரசிகர்களை குழம்ப வைத்தாலும். குழப்பத்திற்க்கான தீர்வை நாடக இறுதியில் சொல்லும் உத்தி ''கிருஷ்ணி ஜெயநாயகத்தின்''; நாடக கலைக்கு இது ஒரு சான்று என்று சொல்லாம்.

மகனின் வரவுக்காய் காத்திருக்கும் பெற்றோரின் அன்பு ஒரு புறமாக இருக்க. காதலியின் எதிர்பார்ப்பு. ஒரு கிராமத்து காதல் எப்படியிருக்கும் என்பதை காதலி சாந்தியின் உணர்வான நடிப்பின் மூலம் அறியமுடிகின்றது.
லண்டனில் இருந்து வந்திருக்கும் காதலன் ''சஞ்சய்''யிடம் தனது காதலை சொல்ல தயங்கும் சாந்திக்கு. அவளின் தோழி கூறும் அறிவுரைக்கு சாந்தி சொல்லும் அந்த உணர்வான வரிகள். கிராமத்து காதலை விரும்பாதவரையும் விரும்ப வைக்கின்றது.

மகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் குடித்துக் கொண்டு திரியும் தந்தை எப்படியிருப்பார் என்பதை சாந்தியின் தந்தையாக இருக்கும் ''விருத்தாடசலம்'' என்கின்ற பாத்திரம் உணர்த்துகின்றது. கிராமத்து பொற்றோர் இடையே இடம்பெறும் ''செல்ல சண்டைகள்'' ரசிகர்களை ரசிக்க வைக்கின்ற போது. நினைவுக்கு வருகின்றார். ஏ.எம். ஜெயஜோதி அவர்கள். யாழ்ப்பாண சொல் வழக்கில் தாய்யாக அல்லது மனைவியாக நடிக்க கூடியவர் இவர். இவரின் சாயலில் ''அபிராமி யோகலிங்கத்தின் நடிப்பு ரசிகர்களை ரசிக்க வைத்தது.

''சஞ்சய்'' தனது ''கேளி'' தனத்தால் தனது காதலியை இழப்பதும். அவசரப்பட்டு தனது வாழ்க்கையை முடித்து கொள்ளும் சாந்தியின் மரணமும் நாடக ரசிகர்களின் மனங்களை உருக வைக்கின்றது.

சஞ்சய்யின் நடிப்பு நன்றாக அமைந்தாலும். தேவையில்லாமல் ஆங்கில சொற் பிரயோகம் செய்வது எரிச்சலை தருகின்றது. அழகான தமிழ் நடையில் நாடகம் செல்லுகின்ற போது. ஆங்கிலத்தை உட்பிரயோகம் செய்வதை தவிர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

நாடகம் ''தூள்'' என்று சொன்னாலும் இறுவெட்டு என்று பார்கின்ற போது சில தவறுகள் இருக்க தான் செய்கின்றன. உரையாடலை கேட்க்க முடியாமல் பின்னனி இசை மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இருந்தாலும் இளம் படைப்பாளிகளின் முதல் முயற்சி என்பதால் அவர்களை பாரட்ட வேண்டும்.

எனவே ''கல்லறை காதல்''. சொல்ல மறந்த காதல் கதை என்று சொல்லாம்.

புது வருட வாழ்த்துக்கள்

எமது இனிய புது வருட வாழ்த்துக்கள்

தினக்குரலில் பூத்த வலைப்பூக்கள்

இலங்கையில் இருந்து வெளியாகும் தினக் குரல் பத்திரிகை. வலைப்பதிவாளர்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் இது வரையும் வெளியான வலைப்பூக்களின் பதிவுகள்.இந்த பூக்கள் மலர உரமாக இருக்கும். அன்பு உறவுகளுக்கு எனது நன்றிகள்.

இணைய தள வானொலியின் இறுவெட்டு வெளியீட்டு விழா புகைப்படங்கள்

தொடர்பான செய்தி முன்னர் தந்திருந்தேன். இறுவெட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இது.

மங்கள விளக்கேற்றும் காட்சி

தாரனி,மற்றும் தினேஸ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் காட்சி

தமிழோசை குழுவினர்
படங்கள் - தாசன்

2007 ஆண்டுக்கான சிறந்த நடிகர்

இவர்கள் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டது மிக்க மகிழ்ச்சி யார்என்று தான் பாரங்களேன்தமிழோசை இணையதள வானொலியின் நிகழ்வில்

30-03-2008 அன்று. இலங்கை தமிழோசை வானொலியின் ‘’இஸ்லாமிய நிகழ்ச்சி ‘’ அங்குரார்பணமும் ‘’கல்லறையில் காதல் ‘’ இறுவெட்டு வெளியீட்டு விழாவும் இடம் பெற்றது.
காலை 10மணிக்கு ஆரம்பமான இன் நிகழ்வை ‘’வானம்பாடி புகழ்’’ யோகராஜா தினேஸ்குமார்;‘’இளம் வானொலிக் குயில்’’ தாரானி லிங்கரெட்ணம் ஆகியோர் தொகுத்து வழங்க. மங்கள விளங்கிளை மத குருமார்கள் , பிரதம விருந்தினர்கள்கள் எற்றி வைக்க வரவேற்ப்புரையை ‘’பொப்பிசை திலகம்’’ திரு.இராமச்சந்திரன் நிகழ்த்தினார்.

சரியாக 11மணிக்கு ‘’இஸ்லாமிய நிகழ்ச்சி ‘’ அங்குரார்பணம் ‘’தமிழோசை இணைய தள வானொலியின்’’ முகாமைத்துப் பணிப்பாளர் திரு.எ. எம். ஜெசீம் தலமையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட பா.உறுப்பினர் திரு.இமாம் அவர்களும், பா.உறுப்பினர் ‘’மக்களின் காவலன்’’ மனோகணேஸ்;, மற்றும் பிரமுகர்களும் இஸ்லாமிய நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.

சிறப்புரைகளை தொடர்ந்து . கிருஸ்ணி ஜெயநாயகம் அவர்களின் எழுத்து வடிவில் உருவான ‘’கல்லறையில் காதல்’’ என்னும் வானொலி நாடகத்தின் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நாடகத்திற்க்கான பின்னனி இசையை கி.துசியந்தன் வழங்க. நாடகத்தினை சிறந்த முறையில் தயாரித்து வழங்கியுள்ளார் ‘’உங்கள் எ.எம். ஜெசீம்’’ அவர்கள். வெளிநாட்டில் இருந்து பிள்ளையின் வரவுக்காய் காத்திருக்கும் பொற்றோர்களின் மத்தியில் தனது காதல் நாயகனுக்காய் காத்திருக்கும் சாந்தியின் வாழ்வில் நிகழும் சம்பவத்தை நாடக வடிவில் கொண்டு வந்துள்ளார் கிருஸ்ணி அவர்கள்.

காத்திருக்கும் சாந்தியின் இறுதி முடிவு எப்படி அமைய போகின்றது. சாந்தி தனது காதல் நாயகனை கரம் பிடிக்க முடியுமா? கேட்டுதான் பார்ங்களேன்


இது குழந்தைகளின் உலகம்

எப்படி இருக்கின்றது பார்த்து சொல்லுங்கள்
மாபெரும் விழா
இலங்கையில் இருந்து ஒலிக்கும் தமிழோசை இணைய தள வானொலி எதிர் வரும் 30-03-2008 (ஞாயறுக்கிழமை ) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் மாபெரும் விழா ஒன்றை எற்பாடு செய்துள்ளது.

இலங்கையின் புதிய அறிவிப்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி தங்களின் திறமைகளை எடுத்து காட்டும் ஒரு களமாக அமைய இருகின்றது. முடித்தால் நிகழ்வின் புகைப்படங்களை நிகழ்வு முடித்த பின் பதிவு செய்கின்றேன்

புகைப்படங்களின் தொகுப்பு....
‘’நாம் சாணேற முயன்றால் எவரோ முழத்தளவுக்கு கீழே இழுக்கின்றார்கள்.’’ குமுறுகின்றார்-இளையதம்பி தயானந்தா


‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் மற்மொரு இதழ் வெளியாகியுள்ளது. கால சூழ் நிலையால் நீண்ட இடை வெளியின் பின் வெளியாகும் சஞ்சிகை இது வாகும்.
மாதத்திற்க்கு இரு முறை வெளியாகி கொண்டு இருந்த ‘’இருக்கிறம் சஞ்சிகை’’ யார் கண்பட்டுதோ தெரியவில்லை. இப்போது இரண்டு மாதத்திற்க்கு 1இதழ் என்ற வகையில் வெளியாகின்றது.

தாமதம் பற்றி ‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் ஆசிரியர் திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் குறிப்பிடும் போது. ‘’நாம் சாணேற முயன்றால் எவனோ அல்லது எவரோ முழத்தளவு கீழே இழுக்கின்றார்கள.’’ என்று குறிப்பிட்டு இப்படி ஒரு உற்சகமான கருத்தை சொல்லுகின்றார். ‘’தை பிறந்தால் வழி பிறக்கும்’’ என்பதில் தான் எல்லோரையும் போலவே எமக்கும் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் யாருககு என்பதில் தான் தீராத சந்தேகங்கள். சஞ்சிகையில் தலையங்கம் இட்டு முதற் பக்கத்தை வணக்கத்தில் முடிப்பதற்க்கு கிடையிலும், முழுவாழ்க்கையிலும் எத்தனை முறை திருத்த வேண்டியிருக்கின்றது ஆண்டவரே!! என்று குறிப்பிடுகின்றார்.

இது அவ்வாறு இருக்க ‘’இருக்கிறம்’’ வாசகர் மத்தியில் இப்படியும்ஒரு வதந்தி பரவியது. ‘’இருக்கிறம்’’ இருக்கின்றதா என்ற கேள்வி. இக்கருத்தை உடைத்து எறியும் வகையில் வெள்ளவத்தை புத்தக கடை ஒனறில் சஞ்சிகை கிடைத்தது.

நானும் ஒரு சஞ்சிகையை வாங்கி கொண்டேன். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த இதழ் தைப் பொங்கல் வெளியீடாக அமைந்து இருக்கின்றது.

இந்த சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியாகி போது. நான் சஞ்சிகையினை ‘’ஆரவாரம்’’ ஊடாகஅறிமுகம் செய்யும் போது. இப்படி குறிப்பிட்டு இருந்தேன். ‘’இலங்கையில் இருந்து வெளியாகிய பல சஞ்சிகைகள் பல காலம் வெளி வந்து பின்னர் அது இருந்த இடமே தெரியாமல் போனது என்றும். அப்படி இல்லாமல் ‘’இருக்கிறம்’’ சஞ்சிகை அவற்க்கு முன் மாதிரியாக விளங்க போகின்றது. என்று எழுதி இருந்தேன். அக் கருத்து பொய்யாகுமா என்ற பயம் எற்பட்டது. ஆனால் இப்போது ஆசிரியரின் உறுதி பிரமாணம் மூலம் அப் பயம் ஓடி விட்டது.

இனி சஞ்சிகையை பார்போம். பொங்கல் காட்சியுடன் இதழின் அட்டை வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை அட்டை பக்கத்தில் வழமை போல் அதிக தென்னிந்திய நடிகர்களின் படங்களை போட்டு அலட்டி கொள்ளாமல். இம் முறை தமிழர்களுடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்க கூடிய வகையில் அட்டை படம் அமைந்து இருக்கின்றது.

வழமைபோல் எமது சக பாடி கானா பிரபா ‘’நிலக்கிளி’’ பாலமனோகரனுடன் நடாத்திய நேர்காணல் வெளியாகியுள்ளது. இந்த நேர்காணல் சென்ற இதழின் தொடர்ச்சியாக அமைந்து இருக்கின்றது. கானா பிரபாவின் ‘’பயண கட்டுரை’’ ஒன்று இந்த சஞ்சிகையில் தொடராக வெளி வந்து அந்த கட்டுரை நிறைவு பெறமல் முற்றும் பெற்றது. அந்த வகையில் படைப்புகள் வாசகர் மத்தியில் முழுமையாக போய் சேர வேண்டும் என்பதே எனது கருத்து.

பனையடிப்பக்கம் ஒரு சிறப்பான கவிதை ஓன்றும,; த.ஜெயசீலனின் இரண்டு கவிதைகளும்.சக பதிவாளர் மு.மயூரன் எழுதிய தபுண்டு என்ற கட்டுரையும் தொடர்ந்து சிறி லங்கா பாஸ்போட்,பழிக்குபழி,வட்டம்,கலைந்த பக்கங்கள் ,மறக்க முடியுமா? போன்ற படைப்புகளுடன் ச.முருகானந்தன் எழுதிய சிறுகதையும் வெளியாகியுள்ளது.

கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘’வானொலிக் கால நினைவுகள்’’ என்ற தொடர் கட்டுரையில் கே.எம் வாசகர் பற்றிய தகவல்கள் காணக் கூடியதாக இருக்கின்றது.

இங்கு குறிப்பிடும் வகையில் ‘’அவளின் பொங்கல் நினைவுகள்’’ என்ற படைப்பு வெளியாகியள்ளது. வெள்ளவத்தையில் வசிக்க கூடிய யாழ் வாசியான ஒரு முதிய பெண்மணியை வைத்து படைப்பு பின்னப்படுகின்றது. அவரிடம் சென்ற சஞ்சிகை ஒன்றின் ஆசிரியர் குழு .அவரிடம் கேள்வி கேட்கின்ற போது. ஆச்சி உங்களிடம் பொங்கல் பற்றி கருத்து கேட்க்க வந்தனாங்கள். என்று குறிப்பிடுப்பிடும் போது கருத்து என்ற சொல் புரியாமல் கரும்போ? என்று அந்த ஆச்சி கேட்ப்பதாக அமைகின்றது. இங்கு எனக்கு குழப்பத்தை தருகின்றது. யாழ் மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்த ஒரு முதிய பெண்மணிக்கு ‘’கருத்து’’ என்ற சொல் அறிந்து இருக்க முடியவில்லை. என்பதை என்னால் எற்று கொள்ள முடியாது. யாழ் மண்ணில் எல்லோரின் வாயில் இருந்து வரும் சொல் ‘’கருத்து’’ தான். இதனை சரி என்று. ஆசிரியர் பீடத்தில் இருக்க கூடிய யாழ் மைத்தர்கள் எந்த வகையில் எற்று கொண்டார்கள். என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது.

தவறான தகவல்லை எமது வளர் சமூகத்திக்கு விதைத்து செல்வது எவ்வளவு சரியான விடயம் என்பதை படைப்பை வரைந்தவர் உணர வேண்டும்.

மாரிமுத்து சிவக்குமார் எழுதிய ‘’ரொட்டிக்கும் பாணுக்கும்’’ என்ற கவிதையுடன் பாலைமண்ணில் என்ற தலைப்பிலான அப்துர் ரகுமான் எழுதும் தொடர் பயண கட்டுரையும் பதிவாகியுள்ளது.

அவசர அவசரமாக இந்த சஞ்சிகை வெளிக் கொண்டு வர முற்பட்டு இருந்தாலும். கூடிய வரை சஞ்சிகையின் பக்க வடிவமைப்புக்களில் அதிக கவனம் செலுத்தி சஞ்சிகையை வெளியீடு செய்து இருப்பது பாரட்டக்க கூடியதாகும்

இலங்கை வானொலியில் ‘’உடுவைத் தில்லை’’யின் உரை


தைப் பொங்கல் அன்று காலை. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் இடம்பெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் சக பதிவாளரும் இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருமான உடுவை எஸ். தில்லை நடராசா அவர்கள் நிகழ்த்திய உரையின் பகுதியை நீங்கள் படிக்க முடியும்.

உலகெங்கும் வாழும் தமிழினம் கொண்டாடும் பண்டிகைகள் பல இருப்பினும் தனிச்சிறப்புக்குரிய பண்டிகையாக தைப்பொங்கல் பண்டிகை திகழ்கிறது. ஆங்கிலேயரால் ஜனவரி எனவும் சிங்களமக்களால் துருது எனவும் அழைக்கப்படும் மாதம் தமிழ்மக்களால் “தை” எனவும் தை மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை தைப்பொங்கல் தினம் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தினம் “உழவர் திருநாள்” எனவும் “உழைப்பாளிகள் பெரு நாள்” எனவும் சிறப்பித்துச்சொல்லப்படுகிறது.


தொழில்கள் பல்கிப்பெருகுவதற்கு முன் அநேகமாக பெரும்பாலானவர்களின் உயிர்நாடியாக உழவுத்தொழிலே விளங்கியது. மழையை நம்பியும் மாட்டை நம்பியும் வயலில் இறங்கிய விவசாயி மாரிமழை நிற்கும் தறுவாயில் வயலில் மணிமணியாக முற்றிய நெற்கதிர்களைக்கண்டு களிப்பில் ஆழ்வான். முற்றிய கதிர்கள் அறுவடையாகும் போது தைமாதம் பிறக்கவும் சரியாக இருக்கும். அன்றைய தினம் புதிய பச்சரிசியை புதுப்பானையில் இட்டு பால் வெல்லச்சர்க்கரை கஜூ முந்திரி வற்றல் ஏலம் முதலியன சேர்த்து பொங்கி மகிழ்வான். உழவன் வாழ்வில் சூரியன் முக்கிய இடம் பெறுவதால் அதிகாலைப்பொழுதில் பால் பொங்கல் செய்து சூரியனை வணங்கி பொங்கலை சூரியனுக்குப்படைப்பான். மக்கள் உயிர்வாழ்வதற்கு உணவு தேவை. தமிழர் உணவில் முக்கிய இடம் பெறுவது சோறு. எனவே வயலில் நெல் விளைவதற்கும் பயிர் வளர்வதற்கும் சூரிய ஒளி தேவை. உலகம் இயங்கவும் உயிர்கள் வாழவும் உழவுத்தொழில் செழிக்கவும் உதவும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாகவும் பொங்கல்; தினம் கொண்டாடப்படுகிறது. இல்லங்களிலும் இந்து ஆலயங்களிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.


மக்கள் உயிர்வாழ்வதற்கு உணவு தேவை. தமிழர் உணவில் முக்கிய இடம் பெறுவது சோறு. எனவே வயலில் நெல் விளைவதற்கும் பயிர் வளர்வதற்கும் சூரிய ஒளி தேவை. சூரியன் உதிக்கும் நேரம் காலை எனவும் மறையும் நேரம் மாலை எனவும் அழைக்கப்படும். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு எனவும் மறையும் திசை மேற்கு எனவும் சூரியன் உதிக்கும் காலைப் பொழுதில் சூரியனை பார்த்து இ;டது கையிருக்கும் பக்கம் வடக்குத்திசை எனவும் வலது கை காட்டும் பக்கம் தெற்கு திசை எனவும் அறிய முடியும்.
சூரியன் ஆட்சி செலுத்தும் பொழுது பகல் எனவும் கண்ணுக்குத் தெரியாத பொழுது இரவு எனவும் அழைக்கப்படும். அக்காலத்து மக்கள் காலம் நேரம் திசை எல்லாவற்றையும் சூரியனை வைத்தே கணித்தார்கள். கடலிலிருந்தும் வாவிகளிலிருந்தும் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாக மேலெழுந்து பின்னர் மாறி மழையாகப்பொழிய நீரிலிருந்தும் சூரிய ஒளியிலிருந்தும் பயிர்கள் தம்முணவைத்தாமே தயாரிக்து வளர அப்பயிர் உயினங்களின் உணவாகின்றது.

தை மாத அறுவடையில் உழவன் வாழ்வில் பொருள் சேர கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும். புதிய தொழில் முயற்சிகள் தொடரும். திருமணங்கள் இடம் பெறும். பலநாட்கள் தொடர்ந்து வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒய்வாக பொங்கலன்று கலை விளையாட்டு என பொழுதை மகிழ்வாகக் களிப்பர்.

இயந்திர சாதனங்கள் கண்டுபிடிக்க முன் உழவரின் முழுத்தொழிலும் மாடுகள் மூலம் நிறைவேற்றப்பட்டன. மாட்டால் நிலத்தை உழுதல்- மாட்மெருவை உரமாகப்பயன் படுத்தல-; மாடு கட்டி வண்டில் இழுத்தல் என ஒவ்வொரு நிகழ்விலும் மாடுகள் முக்கிய இடம் பெற்றதால் பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப்பொங்கலாகியது. மாடுகளையும் நீராட்டி அலங்கரித்து
பொங்கலிட்டு நன்றி தெரிவிப்பது தமிழர் பண்பாடு.
நன்றி,
இலங்கை வானொலி,
தமிழ்ச் சேவை.

‘’நான் ரெடி நீங்கள் ரெடியா’’ பொங்கல் சாப்பிட
எங்கள் வீட்டில் பொங்கல் பொங்கி முடியும் வேளையை நெருங்கி விட்டது. தாத்தா தேவாரம் பாட ரெடி. அப்பா தேங்காய் உடைத்து பொங்கல் படையலை சுற்றி இளநீர்ரை ஊற்ற ரெடி.

அன்பு உறவுகளே பொங்களோ பொங்கல் என்று சொல்லி சாப்பிடுங்கள்.

மீண்டும் ஆரவாரம் தனது அன்பு உறவுகளுக்கு தனது தைத் திரு நாள் வாழ்த்தை தெருவிக்கின்றது.
பொங்கல் வாழ்த்துக்கள்( ‘’உறுதியும்’’ உறுதியற்ற வாழ்வும்)


அன்பு சகோதர சகோதரிகளுக்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.


‘’உறுதியும்’’ உறுதியற்ற வாழ்வும்

பட்டாசை
நான் பார்த்து இல்லை
நான் பட்டாசு வாங்கியது இல்லை.
ஏன் என்றால்?
எங்கள் இடத்தில் வேட்டோசைக்கு
குறை வில்லை.........


நீங்கள் இன்டைக்கு உங்கள்
வயலுக்கு சில வேளை போகலாம்..........
நன்றி சொல்ல

எங்கள் வயலின் இருப்பிடத்தை
நான் வரை படத்தில் தான் அறிவேன்.
அக்காவின் திருமணத்திற்க்கு
அக்கா,அத்தான் பெயரில்
அப்பா உறுதி முடித்த அந்த வயலில்


உறுதி இல்லாமல் ''சில்வா''வும்
அவன் நண்பர்களும் ஏதோ விதைத்து உள்ளனர்....;