கிருஷ்ணி ஜெயநாயகத்தின் ''கல்லறையில் காதல்''நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் யாழ்ப்பாணத்து சொல் வழக்கில் அமைந்த வானொலி நாடகம் ஒன்றை ரசிக்க முடிந்தது.

சிறுவயதில் இருந்து இலங்கை வானொலி தமிழ்சேவையில் ஒலிபரப்பாகும் அனைத்து நாடங்களையும் கேட்க்கும் சந்தர்ப்பம் நிறையவே கிடைத்தது. குறிப்பாக இலங்கை வானொலியில் சனிக்கிழமைகளில் இரவு 9.30மணிக்கு ஒலிபரப்பாகும். ஆராலியர் ந.சுந்தரம்பிள்ளை , எஸ் எஸ்.கணேசபிள்ளை ஆகியோரால் எழுதப்பட்ட யாழ்பாணத்து சொல் வழக்கில் அமைந்த நாடங்களை கேட்டு விட்டுதான் நித்திரைக்கு செல்வது வழக்கம்.

தற்போது புதிய வானொலிகளின் வருகையால் நான் முன்னர் ரசித்த நாடங்களை இப்போது ரசிக்க முடிவதில்லை என்று சொல்லாம். இருந்தாலும் பழைய நாடக நினைவுகளை நினைக்கும் போதெல்லாம். எனது கையிருப்பில் இருக்கும் வானொலி நாடக ஒலிபேழைகளை மீண்டும் ஒரு முறை கேட்டு ரசிக்க தவறுவதில்லை.

ரசிகர்களின் மனங்களில் குடிகொண்ட வரணியூரானின் ''அசட்டுமாப்பிள்ளை'' கே.எஸ். பாலச்சந்திரனின் ''வாத்தியார் வீட்டில்'' பாகம் 1,2,3 , ''அண்ணை றைற்'' புளுகர் பொன்னையா, போன்று இன்றைய இளம் படைப்பாளிகளால் நாடக ஒலிபேழைகள் வெளிவரவேண்டும் என்று எனது நீண்ட நாள் விருப்பம்.
எனது எதிர்பார்ப்புக்கும் நாடக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் முற்று புள்ளி வைத்திருக்கின்றது. இலங்கை தமிழோசை இணைய தள வானொலி. தனது ஒரு வயதினை நோக்கி செல்லுகின்ற இந்த இணைய தள வானொலி தன்னை விரிவுபடுத்தும் நோக்கில். ''இஸ்லாமிய'' நிகழ்ச்சியை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வை ''கொழும்பு தமிழ்ச் சங்கத்தில''; நடாத்தியது.

இந்த நிகழ்வில் வெளியீட்டு வைக்கப்பட்ட இறுவெட்டு தான். ''கல்லறையில் காதல்'' இளம் படைப்பாளியான கிருஷ்ணி ஜெயநாயகத்தின் எழுத்து வடிவில் உருவான இந்த வானொலி நாடகத்தை திரு. ஏ.எம்.கணேஷ் தயாரிக்க திரு. சோமு குணசீலன் இயக்கியுள்ளார். இந்த நாடகத்தின் பின்னணி இசையை திரு. கிருஷ்ணபிள்ளை துஷியந்தன் வழங்கியுள்ளார்.

கிராம புறத்தை மையமாக வைத்து அங்கு வாழ்கின்ற இளம் காதல் உள்ளங்களின் இடையே நிகழ்கின்ற சம்பவத்தை நாடக வடிவில் கொண்டு வந்துள்ளார் நாடக ஆசிரியர்.

சிறிய வயதில் இருந்து அந்த கிராமத்தில் இருக்கின்ற ''சஞ்சய்'' என்கின்ற இளைஞனை காதலிக்கின்றாள் சாந்தி. தொழில் தோடி ''லண்டன்'' செல்லுகின்ற காதலன் ''சஞ்சய்'' தாய் நாடு திரும்பும் வரை தனது காதலை கட்டி காத்திக்கின்ற காதலி சாந்தியின் உணர்வுகள் கிராமத்து காதலுக்கு ஒரு வெற்றி என்று சொல்லாம்.

இவர்கள் இருவர்க்கு இடையே இருப்பது. காதலா? அல்லது ஒரு தலைக் காதலா? ஏன நாடக ரசிகர்களை குழம்ப வைத்தாலும். குழப்பத்திற்க்கான தீர்வை நாடக இறுதியில் சொல்லும் உத்தி ''கிருஷ்ணி ஜெயநாயகத்தின்''; நாடக கலைக்கு இது ஒரு சான்று என்று சொல்லாம்.

மகனின் வரவுக்காய் காத்திருக்கும் பெற்றோரின் அன்பு ஒரு புறமாக இருக்க. காதலியின் எதிர்பார்ப்பு. ஒரு கிராமத்து காதல் எப்படியிருக்கும் என்பதை காதலி சாந்தியின் உணர்வான நடிப்பின் மூலம் அறியமுடிகின்றது.
லண்டனில் இருந்து வந்திருக்கும் காதலன் ''சஞ்சய்''யிடம் தனது காதலை சொல்ல தயங்கும் சாந்திக்கு. அவளின் தோழி கூறும் அறிவுரைக்கு சாந்தி சொல்லும் அந்த உணர்வான வரிகள். கிராமத்து காதலை விரும்பாதவரையும் விரும்ப வைக்கின்றது.

மகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் குடித்துக் கொண்டு திரியும் தந்தை எப்படியிருப்பார் என்பதை சாந்தியின் தந்தையாக இருக்கும் ''விருத்தாடசலம்'' என்கின்ற பாத்திரம் உணர்த்துகின்றது. கிராமத்து பொற்றோர் இடையே இடம்பெறும் ''செல்ல சண்டைகள்'' ரசிகர்களை ரசிக்க வைக்கின்ற போது. நினைவுக்கு வருகின்றார். ஏ.எம். ஜெயஜோதி அவர்கள். யாழ்ப்பாண சொல் வழக்கில் தாய்யாக அல்லது மனைவியாக நடிக்க கூடியவர் இவர். இவரின் சாயலில் ''அபிராமி யோகலிங்கத்தின் நடிப்பு ரசிகர்களை ரசிக்க வைத்தது.

''சஞ்சய்'' தனது ''கேளி'' தனத்தால் தனது காதலியை இழப்பதும். அவசரப்பட்டு தனது வாழ்க்கையை முடித்து கொள்ளும் சாந்தியின் மரணமும் நாடக ரசிகர்களின் மனங்களை உருக வைக்கின்றது.

சஞ்சய்யின் நடிப்பு நன்றாக அமைந்தாலும். தேவையில்லாமல் ஆங்கில சொற் பிரயோகம் செய்வது எரிச்சலை தருகின்றது. அழகான தமிழ் நடையில் நாடகம் செல்லுகின்ற போது. ஆங்கிலத்தை உட்பிரயோகம் செய்வதை தவிர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

நாடகம் ''தூள்'' என்று சொன்னாலும் இறுவெட்டு என்று பார்கின்ற போது சில தவறுகள் இருக்க தான் செய்கின்றன. உரையாடலை கேட்க்க முடியாமல் பின்னனி இசை மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இருந்தாலும் இளம் படைப்பாளிகளின் முதல் முயற்சி என்பதால் அவர்களை பாரட்ட வேண்டும்.

எனவே ''கல்லறை காதல்''. சொல்ல மறந்த காதல் கதை என்று சொல்லாம்.

2 comments:

said...

இளம் படைப்பாளர்களின் இப்படியான விடையங்களை வெளிக்கொண்டுவரும் ஆரவார தாசனே
நன்றிகளும் வாழ்த்துக்களும்

தொடர்ந்து ஆரவாரிக்கட்டும்

said...

\\இளம் படைப்பாளர்களின் இப்படியான விடையங்களை வெளிக்கொண்டுவரும் ஆரவார தாசனே
நன்றிகளும் வாழ்த்துக்களும்\\

உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் எம்மவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தருகின்றது.