தமிழோசை இணையதள வானொலியின் நிகழ்வில்

30-03-2008 அன்று. இலங்கை தமிழோசை வானொலியின் ‘’இஸ்லாமிய நிகழ்ச்சி ‘’ அங்குரார்பணமும் ‘’கல்லறையில் காதல் ‘’ இறுவெட்டு வெளியீட்டு விழாவும் இடம் பெற்றது.
காலை 10மணிக்கு ஆரம்பமான இன் நிகழ்வை ‘’வானம்பாடி புகழ்’’ யோகராஜா தினேஸ்குமார்;‘’இளம் வானொலிக் குயில்’’ தாரானி லிங்கரெட்ணம் ஆகியோர் தொகுத்து வழங்க. மங்கள விளங்கிளை மத குருமார்கள் , பிரதம விருந்தினர்கள்கள் எற்றி வைக்க வரவேற்ப்புரையை ‘’பொப்பிசை திலகம்’’ திரு.இராமச்சந்திரன் நிகழ்த்தினார்.

சரியாக 11மணிக்கு ‘’இஸ்லாமிய நிகழ்ச்சி ‘’ அங்குரார்பணம் ‘’தமிழோசை இணைய தள வானொலியின்’’ முகாமைத்துப் பணிப்பாளர் திரு.எ. எம். ஜெசீம் தலமையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட பா.உறுப்பினர் திரு.இமாம் அவர்களும், பா.உறுப்பினர் ‘’மக்களின் காவலன்’’ மனோகணேஸ்;, மற்றும் பிரமுகர்களும் இஸ்லாமிய நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.

சிறப்புரைகளை தொடர்ந்து . கிருஸ்ணி ஜெயநாயகம் அவர்களின் எழுத்து வடிவில் உருவான ‘’கல்லறையில் காதல்’’ என்னும் வானொலி நாடகத்தின் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நாடகத்திற்க்கான பின்னனி இசையை கி.துசியந்தன் வழங்க. நாடகத்தினை சிறந்த முறையில் தயாரித்து வழங்கியுள்ளார் ‘’உங்கள் எ.எம். ஜெசீம்’’ அவர்கள். வெளிநாட்டில் இருந்து பிள்ளையின் வரவுக்காய் காத்திருக்கும் பொற்றோர்களின் மத்தியில் தனது காதல் நாயகனுக்காய் காத்திருக்கும் சாந்தியின் வாழ்வில் நிகழும் சம்பவத்தை நாடக வடிவில் கொண்டு வந்துள்ளார் கிருஸ்ணி அவர்கள்.

காத்திருக்கும் சாந்தியின் இறுதி முடிவு எப்படி அமைய போகின்றது. சாந்தி தனது காதல் நாயகனை கரம் பிடிக்க முடியுமா? கேட்டுதான் பார்ங்களேன்






1 comments:

said...

அன்பின் தாசன்,

இலங்கை வானொலியின் நாடகங்கள் முன்பு என்னை மிகவும் ஈர்த்தது.
தற்பொழுது இது போன்ற இருவட்டுக்கள் வெளியிடப்படுவது அதன் வளர்ச்சியைக் காட்டுவது மகிழ்வாக இருக்கிறது.

இது போன்ற இலங்கையின் நிகழ்வுகளைத் தொடர்ந்து தாருங்கள்.
நன்றி நண்பரே :)