இலங்கை வானொலியில் ‘’உடுவைத் தில்லை’’யின் உரை






தைப் பொங்கல் அன்று காலை. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் இடம்பெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் சக பதிவாளரும் இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருமான உடுவை எஸ். தில்லை நடராசா அவர்கள் நிகழ்த்திய உரையின் பகுதியை நீங்கள் படிக்க முடியும்.

உலகெங்கும் வாழும் தமிழினம் கொண்டாடும் பண்டிகைகள் பல இருப்பினும் தனிச்சிறப்புக்குரிய பண்டிகையாக தைப்பொங்கல் பண்டிகை திகழ்கிறது. ஆங்கிலேயரால் ஜனவரி எனவும் சிங்களமக்களால் துருது எனவும் அழைக்கப்படும் மாதம் தமிழ்மக்களால் “தை” எனவும் தை மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை தைப்பொங்கல் தினம் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தினம் “உழவர் திருநாள்” எனவும் “உழைப்பாளிகள் பெரு நாள்” எனவும் சிறப்பித்துச்சொல்லப்படுகிறது.


தொழில்கள் பல்கிப்பெருகுவதற்கு முன் அநேகமாக பெரும்பாலானவர்களின் உயிர்நாடியாக உழவுத்தொழிலே விளங்கியது. மழையை நம்பியும் மாட்டை நம்பியும் வயலில் இறங்கிய விவசாயி மாரிமழை நிற்கும் தறுவாயில் வயலில் மணிமணியாக முற்றிய நெற்கதிர்களைக்கண்டு களிப்பில் ஆழ்வான். முற்றிய கதிர்கள் அறுவடையாகும் போது தைமாதம் பிறக்கவும் சரியாக இருக்கும். அன்றைய தினம் புதிய பச்சரிசியை புதுப்பானையில் இட்டு பால் வெல்லச்சர்க்கரை கஜூ முந்திரி வற்றல் ஏலம் முதலியன சேர்த்து பொங்கி மகிழ்வான். உழவன் வாழ்வில் சூரியன் முக்கிய இடம் பெறுவதால் அதிகாலைப்பொழுதில் பால் பொங்கல் செய்து சூரியனை வணங்கி பொங்கலை சூரியனுக்குப்படைப்பான். மக்கள் உயிர்வாழ்வதற்கு உணவு தேவை. தமிழர் உணவில் முக்கிய இடம் பெறுவது சோறு. எனவே வயலில் நெல் விளைவதற்கும் பயிர் வளர்வதற்கும் சூரிய ஒளி தேவை. உலகம் இயங்கவும் உயிர்கள் வாழவும் உழவுத்தொழில் செழிக்கவும் உதவும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாகவும் பொங்கல்; தினம் கொண்டாடப்படுகிறது. இல்லங்களிலும் இந்து ஆலயங்களிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.


மக்கள் உயிர்வாழ்வதற்கு உணவு தேவை. தமிழர் உணவில் முக்கிய இடம் பெறுவது சோறு. எனவே வயலில் நெல் விளைவதற்கும் பயிர் வளர்வதற்கும் சூரிய ஒளி தேவை. சூரியன் உதிக்கும் நேரம் காலை எனவும் மறையும் நேரம் மாலை எனவும் அழைக்கப்படும். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு எனவும் மறையும் திசை மேற்கு எனவும் சூரியன் உதிக்கும் காலைப் பொழுதில் சூரியனை பார்த்து இ;டது கையிருக்கும் பக்கம் வடக்குத்திசை எனவும் வலது கை காட்டும் பக்கம் தெற்கு திசை எனவும் அறிய முடியும்.
சூரியன் ஆட்சி செலுத்தும் பொழுது பகல் எனவும் கண்ணுக்குத் தெரியாத பொழுது இரவு எனவும் அழைக்கப்படும். அக்காலத்து மக்கள் காலம் நேரம் திசை எல்லாவற்றையும் சூரியனை வைத்தே கணித்தார்கள். கடலிலிருந்தும் வாவிகளிலிருந்தும் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாக மேலெழுந்து பின்னர் மாறி மழையாகப்பொழிய நீரிலிருந்தும் சூரிய ஒளியிலிருந்தும் பயிர்கள் தம்முணவைத்தாமே தயாரிக்து வளர அப்பயிர் உயினங்களின் உணவாகின்றது.

தை மாத அறுவடையில் உழவன் வாழ்வில் பொருள் சேர கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும். புதிய தொழில் முயற்சிகள் தொடரும். திருமணங்கள் இடம் பெறும். பலநாட்கள் தொடர்ந்து வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒய்வாக பொங்கலன்று கலை விளையாட்டு என பொழுதை மகிழ்வாகக் களிப்பர்.

இயந்திர சாதனங்கள் கண்டுபிடிக்க முன் உழவரின் முழுத்தொழிலும் மாடுகள் மூலம் நிறைவேற்றப்பட்டன. மாட்டால் நிலத்தை உழுதல்- மாட்மெருவை உரமாகப்பயன் படுத்தல-; மாடு கட்டி வண்டில் இழுத்தல் என ஒவ்வொரு நிகழ்விலும் மாடுகள் முக்கிய இடம் பெற்றதால் பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப்பொங்கலாகியது. மாடுகளையும் நீராட்டி அலங்கரித்து
பொங்கலிட்டு நன்றி தெரிவிப்பது தமிழர் பண்பாடு.
நன்றி,
இலங்கை வானொலி,
தமிழ்ச் சேவை.

4 comments:

said...

நன்றி

அடுத்த முறை முடிந்தால் இப்படியான படைப்புக்களை ஒலியேற்றுங்கள்.

said...

//கானா பிரபா said...
நன்றி

அடுத்த முறை முடிந்தால் இப்படியான படைப்புக்களை ஒலியேற்றுங்கள்.
//

ஆமோதிக்கிறேன்.

said...

கருத்தை எற்று கொள்ளுகின்றேன்.

said...

““//கானா பிரபா said...
நன்றி

அடுத்த முறை முடிந்தால் இப்படியான படைப்புக்களை ஒலியேற்றுங்கள்.
//

ஆமோதிக்கிறேன்.-நன்றி நிர்ஷன்