‘’நாம் சாணேற முயன்றால் எவரோ முழத்தளவுக்கு கீழே இழுக்கின்றார்கள்.’’ குமுறுகின்றார்-இளையதம்பி தயானந்தா


‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் மற்மொரு இதழ் வெளியாகியுள்ளது. கால சூழ் நிலையால் நீண்ட இடை வெளியின் பின் வெளியாகும் சஞ்சிகை இது வாகும்.
மாதத்திற்க்கு இரு முறை வெளியாகி கொண்டு இருந்த ‘’இருக்கிறம் சஞ்சிகை’’ யார் கண்பட்டுதோ தெரியவில்லை. இப்போது இரண்டு மாதத்திற்க்கு 1இதழ் என்ற வகையில் வெளியாகின்றது.

தாமதம் பற்றி ‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் ஆசிரியர் திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் குறிப்பிடும் போது. ‘’நாம் சாணேற முயன்றால் எவனோ அல்லது எவரோ முழத்தளவு கீழே இழுக்கின்றார்கள.’’ என்று குறிப்பிட்டு இப்படி ஒரு உற்சகமான கருத்தை சொல்லுகின்றார். ‘’தை பிறந்தால் வழி பிறக்கும்’’ என்பதில் தான் எல்லோரையும் போலவே எமக்கும் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் யாருககு என்பதில் தான் தீராத சந்தேகங்கள். சஞ்சிகையில் தலையங்கம் இட்டு முதற் பக்கத்தை வணக்கத்தில் முடிப்பதற்க்கு கிடையிலும், முழுவாழ்க்கையிலும் எத்தனை முறை திருத்த வேண்டியிருக்கின்றது ஆண்டவரே!! என்று குறிப்பிடுகின்றார்.

இது அவ்வாறு இருக்க ‘’இருக்கிறம்’’ வாசகர் மத்தியில் இப்படியும்ஒரு வதந்தி பரவியது. ‘’இருக்கிறம்’’ இருக்கின்றதா என்ற கேள்வி. இக்கருத்தை உடைத்து எறியும் வகையில் வெள்ளவத்தை புத்தக கடை ஒனறில் சஞ்சிகை கிடைத்தது.

நானும் ஒரு சஞ்சிகையை வாங்கி கொண்டேன். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த இதழ் தைப் பொங்கல் வெளியீடாக அமைந்து இருக்கின்றது.

இந்த சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியாகி போது. நான் சஞ்சிகையினை ‘’ஆரவாரம்’’ ஊடாகஅறிமுகம் செய்யும் போது. இப்படி குறிப்பிட்டு இருந்தேன். ‘’இலங்கையில் இருந்து வெளியாகிய பல சஞ்சிகைகள் பல காலம் வெளி வந்து பின்னர் அது இருந்த இடமே தெரியாமல் போனது என்றும். அப்படி இல்லாமல் ‘’இருக்கிறம்’’ சஞ்சிகை அவற்க்கு முன் மாதிரியாக விளங்க போகின்றது. என்று எழுதி இருந்தேன். அக் கருத்து பொய்யாகுமா என்ற பயம் எற்பட்டது. ஆனால் இப்போது ஆசிரியரின் உறுதி பிரமாணம் மூலம் அப் பயம் ஓடி விட்டது.

இனி சஞ்சிகையை பார்போம். பொங்கல் காட்சியுடன் இதழின் அட்டை வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை அட்டை பக்கத்தில் வழமை போல் அதிக தென்னிந்திய நடிகர்களின் படங்களை போட்டு அலட்டி கொள்ளாமல். இம் முறை தமிழர்களுடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்க கூடிய வகையில் அட்டை படம் அமைந்து இருக்கின்றது.

வழமைபோல் எமது சக பாடி கானா பிரபா ‘’நிலக்கிளி’’ பாலமனோகரனுடன் நடாத்திய நேர்காணல் வெளியாகியுள்ளது. இந்த நேர்காணல் சென்ற இதழின் தொடர்ச்சியாக அமைந்து இருக்கின்றது. கானா பிரபாவின் ‘’பயண கட்டுரை’’ ஒன்று இந்த சஞ்சிகையில் தொடராக வெளி வந்து அந்த கட்டுரை நிறைவு பெறமல் முற்றும் பெற்றது. அந்த வகையில் படைப்புகள் வாசகர் மத்தியில் முழுமையாக போய் சேர வேண்டும் என்பதே எனது கருத்து.

பனையடிப்பக்கம் ஒரு சிறப்பான கவிதை ஓன்றும,; த.ஜெயசீலனின் இரண்டு கவிதைகளும்.சக பதிவாளர் மு.மயூரன் எழுதிய தபுண்டு என்ற கட்டுரையும் தொடர்ந்து சிறி லங்கா பாஸ்போட்,பழிக்குபழி,வட்டம்,கலைந்த பக்கங்கள் ,மறக்க முடியுமா? போன்ற படைப்புகளுடன் ச.முருகானந்தன் எழுதிய சிறுகதையும் வெளியாகியுள்ளது.

கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘’வானொலிக் கால நினைவுகள்’’ என்ற தொடர் கட்டுரையில் கே.எம் வாசகர் பற்றிய தகவல்கள் காணக் கூடியதாக இருக்கின்றது.

இங்கு குறிப்பிடும் வகையில் ‘’அவளின் பொங்கல் நினைவுகள்’’ என்ற படைப்பு வெளியாகியள்ளது. வெள்ளவத்தையில் வசிக்க கூடிய யாழ் வாசியான ஒரு முதிய பெண்மணியை வைத்து படைப்பு பின்னப்படுகின்றது. அவரிடம் சென்ற சஞ்சிகை ஒன்றின் ஆசிரியர் குழு .அவரிடம் கேள்வி கேட்கின்ற போது. ஆச்சி உங்களிடம் பொங்கல் பற்றி கருத்து கேட்க்க வந்தனாங்கள். என்று குறிப்பிடுப்பிடும் போது கருத்து என்ற சொல் புரியாமல் கரும்போ? என்று அந்த ஆச்சி கேட்ப்பதாக அமைகின்றது. இங்கு எனக்கு குழப்பத்தை தருகின்றது. யாழ் மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்த ஒரு முதிய பெண்மணிக்கு ‘’கருத்து’’ என்ற சொல் அறிந்து இருக்க முடியவில்லை. என்பதை என்னால் எற்று கொள்ள முடியாது. யாழ் மண்ணில் எல்லோரின் வாயில் இருந்து வரும் சொல் ‘’கருத்து’’ தான். இதனை சரி என்று. ஆசிரியர் பீடத்தில் இருக்க கூடிய யாழ் மைத்தர்கள் எந்த வகையில் எற்று கொண்டார்கள். என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது.

தவறான தகவல்லை எமது வளர் சமூகத்திக்கு விதைத்து செல்வது எவ்வளவு சரியான விடயம் என்பதை படைப்பை வரைந்தவர் உணர வேண்டும்.

மாரிமுத்து சிவக்குமார் எழுதிய ‘’ரொட்டிக்கும் பாணுக்கும்’’ என்ற கவிதையுடன் பாலைமண்ணில் என்ற தலைப்பிலான அப்துர் ரகுமான் எழுதும் தொடர் பயண கட்டுரையும் பதிவாகியுள்ளது.

அவசர அவசரமாக இந்த சஞ்சிகை வெளிக் கொண்டு வர முற்பட்டு இருந்தாலும். கூடிய வரை சஞ்சிகையின் பக்க வடிவமைப்புக்களில் அதிக கவனம் செலுத்தி சஞ்சிகையை வெளியீடு செய்து இருப்பது பாரட்டக்க கூடியதாகும்

20 comments:

said...

இருக்கிறம் இதழின் இரண்டு இதழ்களே எனக்குக் கிட்டினாலும், பக்க வடிவமைப்பு, ஆக்கங்கள் என்று தரமான இதழாகவே இருக்கின்றது. எழுத்தாளர்களின் படைப்புக்களை அப்படியே வெட்டி ஒட்டிப் போடாமல் தகுந்த சஞ்சிகை எழுத்துக்கு மாற்றி வெளியிடுவதும் சிறப்பு.

தயானந்தா அவர்களின் மனக்குமுறல் நியாயமானதே, ஆனாலும் இவற்றை ஒதுக்கி விட்டு இருக்கிறம் இன்னும் நீண்ட பயணத்தைக் கடக்கவேண்டும்.

said...

தாசன்
இருக்கிறம் சஞ்சிகையின் வெளியீட்டுக்கு இன்னொரு பிரபல பத்திரிகையின் கொப்பி பேஸ்ட் இதழே காரணம் என அறியக்கூடியதாக இருக்கிறது. அவர்களிற்க்கு ஆலோசனை சொல்லும் குழுவில் இருக்கும் தம்மைத் தாமே அறிவு ஜீவிகள் என சொல்லிக்கொள்ளும் சிலர் ஏனோ தெரியவில்லை சஞ்சிகையின் பெயரைக்கூட மாற்றச்சொல்லவில்லை. அதன் ஆசிரியர் ஒழுங்காக தமிழ் கதைக்க வாசிக்கமாட்டார். ஒரு டீவியில் அடிக்கடி தோன்றீ தமிழைக் கொலைசெய்வார். அந்த டீவீக்காரர்களும் தமிழை வளர்க்கின்றோம் பேர்வழிகள் என தமிழைக் கொலைசெய்பவர்கள். இதனைப் பற்றிமேலும் சொல்லலாம் ஏன் இந்தப் பிரச்சனை நமக்கு. தயானந்தாவுக்கு தெரியும் யார் பிடித்து இழுத்தவர்கள் என்று.

said...

தயானந்தா அவர்களின் ஆதங்கம் சரியாயிருக்கும். உண்மையில் ஊடகத்துறையைப் பொருத்தவரையில் ஒருவர் மற்றவரை மடக்கி அடக்கியாள வேண்டும் என்ற கொள்கையை பலர் ( படித்ததாக கூறும்) கொண்டிருக்கிறார்கள்.திறமையுள்ள யாரையும் முன்னேற விடுவதில்லை. மற்றவர்களுடைய பெயர் ஊடகத்துறையில் அடிபட்டுவிடுமே என்ற பயமும் தன்னம்பிக்கையின்மையுமே இதற்குக் காரணம். தன்னிடமுள்ள நிறைகளைப் பயன்படுத்தி குறைகளைக் குறைத்து மற்றவனுக்கு துரோகம் நினைக்காதளவுக்கு மனதை புன்படுத்தாதளவுக்கு ஒருவர் முன்னேறவேண்டும் என சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதில்லை.. பழிவாங்கல்களும் பொறாமைகளும்தான் அதிகம் தாசன் அண்ணா.
தயானந்தா இதற்கெல்லாம் உடைந்துவிடக்கூடாது. தமிழுக்காக ஆற்றும் பணியில் இன்னும் தன்னை நிலைநிறுத்தி அதனூடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அடிகொடுக்க வேண்டும்.

said...

//சிறி லங்கா பாஸ்போட//

நானும் சக பதிவர் தான் அண்ணை.. :))

தகவலுக்கு நன்றி

said...

“தயானந்தா அவர்களின் மனக்குமுறல் நியாயமானதே, ஆனாலும் இவற்றை ஒதுக்கி விட்டு இருக்கிறம் இன்னும் நீண்ட பயணத்தைக் கடக்கவேண்டும்.““

பிரபா அண்ணா.உங்களின் கருத்துக்கு நன்றி.

said...

//தாசன்
இருக்கிறம் சஞ்சிகையின் வெளியீட்டுக்கு இன்னொரு பிரபல பத்திரிகையின் கொப்பி பேஸ்ட் இதழே காரணம் என அறியக்கூடியதாக இருக்கிறது. அவர்களிற்க்கு ஆலோசனை சொல்லும் குழுவில் இருக்கும் தம்மைத் தாமே அறிவு ஜீவிகள் என சொல்லிக்கொள்ளும் சிலர் ஏனோ தெரியவில்லை சஞ்சிகையின் பெயரைக்கூட மாற்றச்சொல்லவில்லை. // வித்தியா உங்களின் கருத்துக்கும் நன்றிகள்

said...

அப்படியா? சயந்தன் வாழ்த்துக்கள்.

said...

நன்றி நிர்ஷன்

said...

// ’நாம் சாணேற முயன்றால் எவனோ அல்லது எவரோ முழத்தளவு கீழே இழுக்கின்றார்கள//

தயானந்தா அவர்களின் மனக்குமுறல் நியாயமானதே

ஆனாலும் சஞ்சிகை தெடர்ந்து வெளிவரும் ஏனெனில் இன்னும் கடக்கவேண்டிய தூரம் அதிகம் அல்லவா ?

said...

வணக்கம் தாசன்
நான் பார்த்த அளவில் எந்த சஞ்சிகையிலும் இலங்கை தமிழுக்கான எந்த ஆதாரமும் இல்லை.வெறும் இந்திய சினிமாவை நம்பி பத்திரிகை நடத்தும் அவர்களை இங்கு இழுப்பது ஆரோக்கியமானது அல்ல.ஆகவே வித்யா போன்ற விடயம் அறியாதவர்களுடைய விமர்சனத்தை பத்திரிகை துறை சார்ந்தவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.வித்யா இன்னும் ஒன்றை விளங்க வேண்டும்.ஆதியும் அந்தமும் இல்லா மொழி தமிழ் மொழி ஆகவே யாரும் தமிழை கெலை செய்ய முடியாது,ஆகவே கவலை கெள்ளாதீர்.உமது கோபத்தை அந்த தொலை காட்சியுடன் தீர்த்து கொள்ளும்.வீணாக நல்லவர்கள் பார்க்கின்ற தளங்களுக்கு கீழ்தரமான விமர்சனங்களை அனுப்ப வேண்டாம் என கேட்டு கேள்கின்றேன்.

said...

அப்படியா பிரணவன்
நீங்களும் அந்த டீவியின் ஒரு வேலையாளா? அமுதம் சஞ்சிகையை படித்துப்பாருங்கள் வித்தியாசம் புரியும். இருக்கிறம், மல்லிகை ஞானம் போன்ற சஞ்சிகைகளுக்கும் அமுதத்துக்கு இருக்கும் வித்தியாசம் அனைவருக்கும் தெரியும். உங்களை விட என விடயம் அதிகம் தெரியும் அதனை புரிந்துகொள்ளுங்கள் உங்களைப் போன்ற அமுதம் சஞ்சிகை குமுதம் சஞ்சிகை வாசிக்கும் விடலைகளுடன் கதைத்து வேலையில்லை. இருக்கிறம் இதழில் பின்னடைவுக்கு காரணம் அமுதம் என்பது பலருக்குத் தெரியும்.

இந்த விமர்சனத்தில் என்ன கீழ்த்தரத்தைக் கண்டீர்கள். நீர் இன்னமும் மல்லிகை, ஞானம் சிரித்திரன் தாயகம் போன்ற இலங்கைச் சஞ்சிகைகளி வாசிக்கவில்லை என நினைக்கின்றேன் அவை முற்றுமுழுதாக இலங்கை தமிழில் வருகின்றவை. கிணற்றுத் தவளையாக இருக்கவேண்டாம்.

said...

இருக்கிறம் குழுவில் இருப்பதால் அது எதிர்நொக்கும் பல துன்பகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு திருப்தி. எங்களுக்குள் சண்டையிடுவதை விட்டு விட்டு விடுவோம். உங்களுக்கு தெரியுமா இது ஒரு யாழ்ப்பாண பிரதேசவாதம் என்று கடுமையான குற்றச்சாட்டு எங்களுக்கு உண்டு. ஆனால் இந்த குற்றச்சாட்டை எந்த ஒரு கிழக்கு அல்லது முஸ்லீம் வாசகர்கள் கூறவில்லை. இந்த குற்றச்சாட்டு சொல்வது அனைவரும் யாழ்ப்பாணத்தவர்கள். அவர்கள் மேலும் கூறுவது இதன் பெயர் யாழ்ப்பாண சாயலை ஒத்துள்ளது என்று. ஐயோ அப்ப நீங்க ஒரு பெயரைச் சொல்லுங்கோவன் என்டால் ...... இலங்கைத்தமிழர் என்றால் ... நாங்கள் இலங்கை விகடன் என்றோ ஒரு எழுத்தை மாற்றி அமுதம் என்றோ செய்யவில்லை. எங்களால் முடித்நத அளவிற்கு தனித்துவமாக செய்ய முயல்கின்றோம். உங்கள் ஆதரவு முக்கியம். வித்யா அவர்களே பிரணவன் மாறி விளங்கி விட்டார் போல இருக்குது. குமுதம் ஆனந்த விகடன் வாங்குவர்களில் பாதி ஆட்கள் வாங்கினால் கூட எங்களால் வெற்றி பெற முடியும். நன்றி.

said...

இதில் ஆச்சரியப்பட என்ன? உள்ளது
இது தமிழன் சிறப்பாச்சே!!
இன்னுமொரு இனத்துக்கு உதவுவான் தமிழன், தமிழனுக்கு உதவமாட்டான்.
இங்கு கூட வெள்ளைக்காரனுக்கு விலை குறைக்கும் தமிழ் வியாபாரிகள், தமிழருக்கு கூட்டிவிற்கத் தவறமாட்டார்கள்.பொய் சொல்லி பழையதை,திகதி பிந்தியதைத் தலையில் கட்டத் தயங்க
மாட்டார்கள்.

said...

//
இறக்குவானை நிர்ஷன் said...
தயானந்தா அவர்களின் ஆதங்கம் சரியாயிருக்கும். உண்மையில் ஊடகத்துறையைப் பொருத்தவரையில் ஒருவர் மற்றவரை மடக்கி அடக்கியாள வேண்டும் என்ற கொள்கையை பலர் ( படித்ததாக கூறும்) கொண்டிருக்கிறார்கள்.திறமையுள்ள யாரையும் முன்னேற விடுவதில்லை. மற்றவர்களுடைய பெயர் ஊடகத்துறையில் அடிபட்டுவிடுமே என்ற பயமும் தன்னம்பிக்கையின்மையுமே இதற்குக் காரணம். தன்னிடமுள்ள நிறைகளைப் பயன்படுத்தி குறைகளைக் குறைத்து மற்றவனுக்கு துரோகம் நினைக்காதளவுக்கு மனதை புன்படுத்தாதளவுக்கு ஒருவர் முன்னேறவேண்டும் என சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதில்லை.. பழிவாங்கல்களும் பொறாமைகளும்தான் அதிகம் தாசன் அண்ணா.
தயானந்தா இதற்கெல்லாம் உடைந்துவிடக்கூடாது. தமிழுக்காக ஆற்றும் பணியில் இன்னும் தன்னை நிலைநிறுத்தி அதனூடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அடிகொடுக்க வேண்டும்.
//

எந்த ஊடகத்தில் ? யார்? எனக் கூற முடியுமா?

said...

இதனை மின்னஞ்சல் ஊடாக ஒருவர் கேட்டிருந்தார். பதிலை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன்.

Anonymous said...

வித்யா உமது கருத்துக்கு நன்றி.
நான் எழுதியதை மீண்டும் ஒரு முறை வாசித்து பார்க்கவும்.நான் இந்திய சினிமாவை நம்பி பத்திரிகை நடத்துவோர் என்று கூறியது முன்னர் வந்த அமுது,ஜெ போன்றவற்றையும் இப்பொழுது வரும் அமுதத்தையும் தான்.அவர்களை இங்கு இழுக்க வேண்டாம் என்றது.ஓர் பத்திரிகையின்(இருக்கிறம்) விமர்சனத்தில் வேறுஓர் பத்திரிகையினை(அமுதம்) விமர்சிப்பது அவர்களுக்கிடையில் உள்ள உறவை முறிப்பதற்கு சமம்.இதுவே உமது விமர்சனத்தில் உள்ள கீழ்த்தரம்.அந்த தொலை காட்சியை இங்கு குறிப்பிட்டது சரியா?குறைகளை குறிப்பிட வயது,படிப்பு,பல விடயங்களை அறிதல் போன்றவை தேவை இல்லை என நினைக்கின்றேன்.ஆகவே உமது சகுனி வேலையை உம்முடன் வைத்து கொள்ளும்.
உமக்கு தெரியுமா விடலை,கிணற்றுத் தவளை போன்றவற்றின் அர்த்தம்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பதை உம்மூடாக காண்கின்றேன்.உமது பெயரையும்,விமர்சனத்தையும் பார்க்கும் போது கண்ணாயிரத்தின் கதையும் ஏழுமலையின் கதையும் நினைவிற்கு வருகிறது.

said...

//எந்த ஊடகத்தில் ? யார்? எனக் கூற முடியுமா?

//
இப்படி கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தவர்களுக்கு பதில் அனுப்பியிருக்கிறேன்.

( ஏற்கனவே இப்படியொரு பின்னூட்டம் அனுப்பியிருந்தேன். தாசன் அண்ணா அதனை இட மறந்துவிட்டீர்கள் போல)

Anonymous said...

தாசன வித்யாவுக்கு எழுதிய விளக்கத்தை ஏன் வெளியிடவில்லை

Anonymous said...

இலங்கையில் 'இருக்கிறம்' என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறியத்தந்ததற்கு நன்றி. சஞ்சிகைகள் தொடர்ந்து வெளிவருவதற்கு தமது பொருளாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது உண்மையேயானாலும் அவற்றின் தனித்துவத்தாலேயே வாசகர் மனதில் இடம்பிடிக்க முடியும். உதாரணத்திற்கு எப்பவோ நின்றுபோன 'சிரித்திரன்' இன்றும் நினைவில் நிற்பதற்கு சுந்தரின் தனித்துவமான நகைச்சுவை அணுகுமுறையே காரணமாகும்.

said...

இருக்கிறம் சஞ்சிகையைப் பற்றிய காரசாரமான விவாதங்கள் ஒருபுறமிருக்க........ பல தடைகளையும் தாண்டி இன்று இருக்கிறம் தனது வெற்றிகரமான பயணத்தில் 21 இதழை பூர்த்தி செய்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றுவருவது உங்களுக்குத் தெரியுமா? கொழும்பு மற்றும் புலம்பெயர்நாடுகளில் மட்டுமல்ல இன்று வடக்கு கிழக்கிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் ஆதரவைப் பெற்றுள்ளமை தமிழ் சஞ்சிகை வரலாற்றில் ஒரு சாதனைதான். இருக்கிறமின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்

யாத்ரா