கதிர்காமம் ஆலயத்தின் காட்சிகள்

அண்மையில் இலங்கையில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான கதிர்காமம் ஆலயத்திற்க்கு சென்ற போது. எடுத்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு....

ஆலயத்தின் முன் தோற்றம்

செல்லக் கதிர்காமத்தின் ஆலயத்தின் அருகே ஓடும் அருவி


சல சலக்கும் அருவியின் மகிழ்வில்

அருவியை பார்த்து கொண்டு இருக்கலாம்

உச்சி மலையில் இருக்கும் கோயில்.



உச்சி மலைக்கு செல்லும் பாதை

படம்,தகவல்- தாசன்

16 comments:

said...

ரண்டு மூண்டு நாளா ஆளைச் சிலமனில்லை எண்டு பார்த்தால், கதிர்காமம் போட்டியளே?

ஆகா, நடத்துங்கோ, கொடுத்துவச்சனீங்கள்

said...

படங்களுக்கு நன்றி தாசன். கோவிலுக்கு உள்ளே எந்தப் படமும் எடுக்கவில்லையோ?

மலையிலிருந்து விழுவதை அருவி என்போம். நீங்கள் தரையில் ஓடுவதை அருவி என்று சொல்லியிருக்கிறீர்களே? அதற்கு ஆறு என்றல்லவா பெயர்?

said...

தாசன் !
படங்களுக்கு நன்றி!
மாணிக்க கங்கை பிரவாகம் எடுத்து ஓடுவதை பார்க்க ஆசையாக உள்ளது.
குமரன் கூறுவது போல் இது ஆறே.....
அடுத்து குமரனுக்கு... கதிர்காமத்தில் விக்கிரக வழிபாடுஇல்லை; உள்ளே ஒரு திரைச் சேலை முருகன் படத்துடன் இருக்கும்.
அத்துடன் கோவிலும் சிறிதே!!

said...

கதிர்காமம் இப்படித்தான் இருக்குமா?
நான் போனதில்ல தாசன் அண்ணா...!
ஆனால் ஒரு உண்மை..
ஆறுபடை வீடும் போய் வந்து விட்டேன்....
இதிலென்ன ஆச்சரியம்..,
யாழ்ப்பாணத் தமிழனுக்கு தென்னிலங்கை ரொம்ப தூரமுங்கோ...!
போய் பத்திரமா திரும்பி வந்தால் திருப்பதிக்கு போய் மொட்டை போடலாம்...!

மிக்க நன்றி..
அழைத்து சென்று விட்டீர்கள்...
கதிர்காமத்திற்கே....

said...

பிரபா அண்ணா நன்றி.

said...

//படங்களுக்கு நன்றி தாசன். கோவிலுக்கு உள்ளே எந்தப் படமும் எடுக்கவில்லையோ?//

நன்றி குமரன். கோவிலுக்கு உள்ளே படங்கள் எடுக்க முடியாது.

said...

கதிர்காமம் தற்பொழுது சிங்களமயமாகிவிட்டது. செல்லக்கதிர்காமம் மட்டும் இன்னமும் தமிழ்மணம் கமழ்கின்றது. அதுவும் எப்போ சிங்களமயமாகின்றதோ தெரியவில்லை. மலைக்கோயிலில் கூட புத்தர் சிலை அமைத்துவிட்டார்கள். இனவாதிகள்.

மஹிந்த மாமாவின் ஆட்சியில் கதிர்காமப்பக்கம் போகவே பயமாக இருக்கிறது உங்கள் துணீவுக்கு பாராட்டுகள்.

said...

//யாழ்ப்பாணத் தமிழனுக்கு தென்னிலங்கை ரொம்ப தூரமுங்கோ...!
போய் பத்திரமா திரும்பி வந்தால் திருப்பதிக்கு போய் மொட்டை போடலாம்...!//
நன்றி வானம்பாடி. :) நீங்கள் சொல்வது சரிதான்.

said...

//தாசன் !
படங்களுக்கு நன்றி!
மாணிக்க கங்கை பிரவாகம் எடுத்து ஓடுவதை பார்க்க ஆசையாக உள்ளது.
குமரன் கூறுவது போல் இது ஆறே.....
அடுத்து குமரனுக்கு... கதிர்காமத்தில் விக்கிரக வழிபாடுஇல்லை; உள்ளே ஒரு திரைச் சேலை முருகன் படத்துடன் இருக்கும்.
அத்துடன் கோவிலும் சிறிதே!!//

யோகன் அண்ணா. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

said...

''செல்லக்கதிர்காமம் மட்டும் இன்னமும் தமிழ்மணம் கமழ்கின்றது. ''

வந்தியத்தேவன் அண்ணா நன்றி. உண்மையில் நான் நிம்மதியாக படம் எடுத்த இடம் என்றால் செல்லக்கதிர்காமம் தான்.

said...

koilinil ulle photo edukka anumahikirargal. naangal poonapothu eduthiukirom.

said...

முருகன் எனும் திருநாமம்
முழங்குமிடம் கதிர்காமம்
குருபரணே சரணம் உந்தன் சேவடி
தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி...

என்ன அருமையான பாடல்காட்சி. கதிர்காமத்தையும் நடிகர்திலகத்தையும் வைத்து எடுக்கப்பட்ட காட்சி. கதிர்காமம் செல்ல வேண்டும் என்று நீண்ட நாள் ஆவல். ம்ம்ம்... எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் வரை அங்கே முருகன் முருகனாகவே இருக்கிறானா என்று பார்க்கலாம். :(

said...

படங்களுக்கு நன்றி தாசன் :))

பயமில்லாமல் போய்வந்து விட்டீர்கள் உங்கள் துணிவுக்கு பாராட்டுகள்.

said...

இந்த பதிவும் உங்கள் பதிவுடன் ஓரளவு தொடர்புபடையது தான் பார்க்க இங்கே அழுத்தவும்

said...

நான் ஈழத்திலிருந்து வந்தவனில்லை. ஆனாலும் அவர்களின் பதிவுகளைப் படிப்பதில் ஒரு சுகம் காணுபவன். அதெப்படி, நீங்கள் மட்டும் கொஞ்சு தமிழில் விளையாடுகிறீர்கள்! படம் வேறு இங்கே.

இப்படி ஓடையும் (ஆமா, இது அருவியும் இல்லை, ஆறும் இல்லை), மரமும் அருகே அமைந்து நான் பார்த்தே இல்லை. படங்களை ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.(எங்க ஊரைச் சுட்டிக்காட்டி கிண்டல் செய்ய வேண்டாம், கடுப்பாயிடுவேன்!)

said...

மாணிக்க கங்கையோரம் செல்லக் கதிர்காமம் அற்புதமான ஒளிப்படம். எனது சேமிப்பில் இட்டுள்ளேன். மரச்சோலைகளிடையே கதிரமலையும் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.