யாழ்ப்பாணத்தில் உலகசாதனை

இலங்கை யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஒன்பது மணித்தியாலங்கள் பேசி உலக சாதனை படைக்கப்பட்டிருக்கின்றது.

உலக சாதனை வரலாற்றில் முதன் முதலாக தேவஸ்தான வளர்ச்சி நிதிக்காக நிகழ்த்தப்பட்ட உலகசாதனை இதுவாகும். வடமராட்சி அருட்பதி அல்வாய் கோயில் தோட்டம் “சிறி ஜெகதீஸ்வரம் தேவஸ்தானம்” திருப்பபணி நிதிக்காக இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

திரு.அழகு ஜெகதீஸ்வர தேசிகர் என்பவரே உலக சாதனை படைத்தவர் ஆவார்.

“மகாபாரதம்’’ என்னும் பொருளில் கடந்த 01-10-2007 அன்று காலை 8மணி தொடக்கம் மாலை 5மணிவரை தொடர்ச்சியாக பேசி இச் சாதனையைப் படைத்துள்ளார்.


இச் சாதனை நிகழ்வுக்கு நடுவர்களாக திரு.தங்கமயில், செல்வி சுகுணா, டாக்டர் கதிரவேற்பிள்ளை, பண்டிதர் எஸ். வேலாயுதம், அதிபர் கி. நடராஜா, அதிபர் சிவநாதன்,ஆகியோர் கடமையாற்றினர்.

ஐக்கிய நாடுகள் சபையில் கியூபா ஜனாதிபதி பிடல் கஸ்ட்றோ 4-அரை மணித்தியாலம் பேசி நிகழ்த்திய உலக சாதனையை 2002ம் ஆண்டு எமது நாட்டு கலைஞர் திரு.சோக்கல்லோ சண்முகம் அவர்கள் “இலக்கிய நயம்” என்னும் பொருளில் 7-அரை மணித்தியாலங்கள் பேசி முறியடித்தார். இச் சாதனையை இப்போது 9மணித்தியாலங்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

நன்றி
வீரகேசரி(வார மலர்)
14-10-2007

ஒரே மேடையில் 8நூல்கள் வெளியீடு



தமிழ்நாட்டில் கவிஞர் பா.விஐய் எழுதிய 10நூல்கள் கவிஞர் கருணாநிதி அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ் விடயம் வாசகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட விடயமாகும்.

ஆனால் இலங்கையில் இப்போது நிலவுகின்ற இறுக்கமான நிலமையில் ஒரு புத்தகம் வெளியிடுவது என்றால் மிகவும் கஷ்டமான விடயமாகும். ஆனால் ஒரே மேடையில் 8நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிக்குப்பு மையமும், மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முத்தமிழ் மன்றமும் இணைத்து நடாத்திய ஓ.கே.குணநாதன் எழுதிய 8நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 23-10-2007 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.


ஓ.கே.குணநாதன் எழுதிய

1) பிஞ்சுக் கால்கள்-(சிறுவர் கதை)

2)அம்மா – (சிறுவர் கதை)

3)சங்கருக்கு பிறந்தநாள்-(சிறுவர் கதை)

4)tender leg –(சிறுவர் கதை)

5)ஐயோ! காடு எரியுது....!-(சிறுவர் கதை)

6)குயில் அம்மா –(சிறுவர் கதை)

7)நாளைய தீனி- (சிறுகதைத் தொகுப்பு)

8)ஆடித்தீ –( நாவல்)

என்ற 8நூல்களும் எழுத்தாளரும் சக வலைப் பதிவாளருமான உடுவை எஸ். தில்லைநடராசா அவர்களால் வெளியீட்டு வைக்கப்பட்டது.




வினோதமான ஒலி உங்களுக்கு வருகின்றதா? வெந்தயம் சாப்பிடுங்கோ!

அன்பான உறவுகளே. நான், நீங்கள் எல்லாம் அம்மாவின் கையால் சாப்பிட்டு எத்தனை வருடங்கள். அம்மா பார்த்து பார்த்து சமைத்த சாப்பாட்டின் சுவை சொல்லவா வேண்டும்.

அக்காமாரே நான் உங்களை குறை சொல்ல வில்லை. நீங்கள் உங்கள் கணவர்மார்க்கு சமைத்து போடுவது “அமுதம்’’

என்டாலும் பார்ருங்கோ வீட்டு சாப்பாட்டை விட கடை சாப்பாடு தான் கூட நாங்கள் சாப்பிடுகின்றோம். இதற்கு அப்பால் அம்மாவின் சாப்பாடு போல் மனைவியின் கையால் சாப்பிடுவோர் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இப்போது எல்லாம் நேரத்துக்கு எற்ற வகையில் தான் சாப்பாடு. நாங்கள் காலமை வெள்ளவத்தையில் பஸ்சால் இறக்கினால் இராமகிருஸ்ணாவில் ஒரு வெட்டு. மதியம் பம்பலப்பிட்டியில் சரஸ்வதி கோட்டலில் வெட்டு இப்படி வெட்டு வெட்டு என்டு வெட்டி கடைசியாக கொட்டுகிறது. நாங்கள் இருக்கின்ற வீட்டை தானே.

வயறு குடைய குடைய போய் எத்தனை மணி நேரமும் இருந்தாலும் சரி வராது. வினோதமான ஒலிகள் மட்டும் வரும். இது எங்கே எப்போது என்று சொல்ல முடியாது. இது நாம் வேலை செய்யும் இடங்களில் கூட நிகழ்ந்து விடுகின்றன.


எமது சாப்பாட்டால் தான் இப்படி தோன்றுகின்றது. அதற்க்கு நாங்கள் சாப்பிடமல் இருக்க முடியுமா? என்று நீங்கள் கூற முனைவது தெரிகின்றது. அது தான் உங்களுக்கு ஒரு கை வைத்தியம் சொல்லுகின்றேன். கோபிக்க வேண்டாம் சிவபொருமானுக்கு முருகன் உபதேசம் செய்தவர் தானே என்னுடைய அலோசனையையும் கேளுங்கோ.

தேவையான பொருட்ங்கள்

1) ஒரு கிளாஸ்லில் சுத்தமான நீர்ரை எடுத்தல்
2) துப்பரவான வெந்தயம் (உங்களுக்கு தேவையான அளவு)

செய்முறை

1)இரவில் நீங்கள் நிந்திரைக்கு போகும் போது. உங்களுக்கு தேவையான வெந்தயத்தை எடுத்து. சுத்தமாக உள்ள கிளாஸ்லில் போட்டு அதற்க்கு மேல் நீரை விட்டு கிளாஸ்சை மூடி வைக்கவும்.

3) காலையில் எழுந்தவுடன் வாயை கொப்பளித்து விட்டு. கிளாஸ்சில் உள்ள வெந்தயத்தை எடுத்து “சப்பி” சாப்பிடவும். பின்னர் குளிர்ந்த நீரினை எடுத்து போதியளவு குடியுங்கள்.

4) 1மணி நேரம் பொறுத்து காத்திருங்கள். பின்னர் சென்று இருந்து பார்ருங்கள் எல்லாம் சுகமாக போகும். உடம்பும் உற்சாகமாக இருக்கும்.

''அண்ணை றைற்"


கனடாவில்லிருந்து(குரு அரவிந்தன்)
சென்ற ஞாயிற்றுக்கிழமை, அக்ரோபர் மாதம் 2007, 7ம்திகதி கனடிய தமிழ் கலைஞர்கள் கழகம், பாரதி புரடக்ஷனின் ஏற்பாட்டில் கே. எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு அடங்கிய இறுவட்டு வெளியீட்டு விழா, கனடா ஒன்ராரியோ ரொறன்ரோவில் உள்ள ஏஜியன்கோட் சனசமுக நிலையத்தில் மாலை 5:30 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் அதைத் தொடர்ந்து கனடிய தேசியகீதமும் இடம் பெற்றன. ஒரு நிமிட மௌம் அஞ்சலி, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு.பொ.கனகசபாபதியின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் நிகழ்ச்சிகளை சிறந்த நடிகரும், கலைஞருமான துசி ஞானப்பிரகாசம் மிகவும் சிறப்பாகக் கொண்டுநடத்தினார்.
பாரதி கலைக்கோயில் அதிபரும், பிரபல நடிகர், திரைப்பட இயக்குனருமான திரு. எஸ். மதிவாசன் ஆரம்ப உரை நிகழ்த்தும்போது, இலங்கை வானொலியில் தன் குரல் வளத்தால் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை உருவாக்கிய கே.எஸ். பாலச்சந்திரன்தான் தன்னையும் கலை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்றும், இன்று இந்த இறுவட்டு வெளிவருவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டு, பாலா அண்ணாவிற்குப் புகழாரம் சூட்டிப் பாராட்டினார். தொடர்ந்து உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம், மேற்குலக நாடுகளில் உள்ளது போன்ற தனிமனித நடிப்புக் கலையை முதன்முதலாக தமிழ் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்றும், கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடக, திரைப்படத்துறையில் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்றும் தனது வாழ்த்துரையில் அவரைப்பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

தலைமை உரையாற்றிய அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள், கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எங்கோ பிறந்திருந்தால் இன்று எங்கேயோ போயிருப்பார் என்று ஒரு உண்மையான, சிறந்த கலைஞனைப் பாராட்டத் தயங்கும் எங்கள் தமிழ் சமுதாயத்தின் குறைபாட்டை மறைமுகமாய்ச் சுட்டிக் காட்டினார். மேலும் நகைச்சுவை வாய்மொழியாயும், உடல்மொழியாயும் வெளியே வரும்போது அது காலத்தால் அழியாமல் நின்றுவிடுகிறது. என். எஸ். கிருஸ்னனின் நகைச்சுவைகள் போலவே கே.எஸ்.பாலச்சந்திரனின் நகைச்சுவையும் எல்லோர் மனதிலும் பல ஆண்டுகளின் பின்பும் நிலைத்து நிற்கின்றது என்பதையும், எல்லாவற்ருக்கும் மேலாக அவரை ஒரு உயர்ந்த பண்பாளராக, மனிதநேயம் மிக்க ஒரு நல்ல மனிதராக மதிக்கிறேன் என்றும் குறிப்பிட்டு, அவரைப் பாராட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ரூபவாகினி தமிழ்துறை பணிப்பாளரும், இலங்கை வானோலி தமிழ் நாடகத் தயாரிப்பாளரும், கனடா ரீவிஐ பணிப்பாளருமான ப. விக்னேஸ்வரன் காங்கேயன்துறையைச் சேர்ந்த நடிகமணி வி.வி. வைரமுத்துவைப் போலவே கே.எஸ்.பாலச்சந்திரனும் நடிப்புத்துறையில் வெகுஜன அங்கீகாரம் பெற்ற மிகச்சில ஈழத்தமிழ் கலைஞர்களில் ஒருவர் என்றும், எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து ஈழத்தமிழர்களால் நன்கு அறியப்பட்ட கலைஞர், நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என்று பல பரிமாணங்கள் இவருக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டு அவரைப் பாராட்டினார்.

வெளியீட்டு உரை நிகழ்த்திய கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள், தொல்காப்பியத்திலே எட்டாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சுவை நகைச்சுவை என்றும், அந்தச்சுவை கே.எஸ்.பாலச்சந்திரனுக்குக் கைவந்த கலை என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த இந்த இறுவட்டில் ஓடலி ராசையா, தியேட்டரில் மூத்ததம்பி, உகண்டா வானெலிச் செய்திகள், சப்ளையர் சத்தியமூர்த்தி, ''அண்ணை றைற்'' ஆகிய தனிநபர் நகைச்சுவை நிகழ்ச்சிகள் பதியப்பட்டு இருப்பதாகவும், தன்னை அதிகம் கவர்ந்தது உகண்டா வானொலிச் செய்திகள்தான் என்றும் குறிப்பிட்டு இறுவட்டை வெளியீடு செய்துவைத்தார்.


சி.ரி.பி.சி வானொலி அதிபரும், சிறந்த நாடக நடிகருமான இளையபாரதி அவர்கள் பல வருடங்களாகவே கே.எஸ்.பாலச்சந்திரனைத் தனக்குத் தெரியும் என்றும், சிறு பையனாக இருக்கும்போது யாழ்ப்பாணத்தில் நடந்த ஒருவிழாவில் அவரைப்பற்றி உரையாற்றுவதற்கு தனக்குச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டுப் பெருமைப் படுவதாகவும் குறிப்பிட்டு, பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.



ஜேர்மனியில் இருந்து வெற்றிமணி ஆசிரியர் அனுப்பி வைத்த வாழ்த்துக் கவிதையை நடிகரும், நகைச்சுவை எழுத்தாளருமான கதிர் துரைசிங்கமும், அமெரிக்காவில் இருந்து கே.எஸ்.பாலச்சந்திரனின் நண்பர் சியாட்டில் மகேந்திரன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை எழுத்தாளரும், சட்டத்தரணியுமான மனுவல் ஜேசுதாசன் அவர்களும் வாசித்து அவரைப் பாராட்டினார்கள்.


ஆசியுரை வழங்கிய திரு. விஜயகுமாரக்குருக்களும், தொடர்ந்து உரையாற்றிய எஸ்.எஸ். அச்சுதனும் தமிழ் மக்களிடையே அதிகம் செல்வாக்குப் பெற்ற நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் என்பதைக் குறிப்பிட்டு உரையாற்றினர். தொடர்ந்து இறுவட்டுப் பிரதிகள் வெளியிடப்பட்டன. ஏற்புரையில் கே. எஸ். பாலச்சந்திரன் இந்த விழா சிறப்பாக நடைபெற முன்னின்று உழைத்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.


குறிப்பாக மதிவாசன், ரஜீவிகரன், விக்னேஸ்வரன், ராஜ் சுப்பராயன், டிஜிமீடியா கருணா, மிடி மெலோடிஸ் எஸ் வி. வர்மன், துசி ஞானப்பிரகாசம், றெமி காந்தன், அவுஸ்திரேலியா கானப்பிரபா ஆகியோரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.



சின்னவயதிலே இலங்கை வானொலி மூலம் கே.எஸ்.பாலச்சந்திரனின் ரசிகனாக நானிருந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் அவரோடு பழகுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம்கிடைத்தது. 1997ல் "தமிழ் ஆரம்"என்ற சிறுவர்களுக்கான ஒளிநாடாவை நான் வெளியிட முயற்சிகள் செய்து கொண்டிருந்தபோது கலையகத்திற்குச் தற்செயலாக வந்த அவர் அதைப் பார்த்துவிட்டு தன்னை அறிமுகம் செய்து, அடுத்த தலைமுறை உங்களை என்றென்றும் ஞாபகம் வைத்திருக்கும் என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.




அதன் பின்பு இலக்கியச் சந்திப்ப்புகளில் அடிக்கடி அவரைச் சந்தித்து உரையாடுவேன். நல்ல ஞாபக சக்தியும், ஆழ்ந்த நாவல் இலக்கிய அறிவும் அவரிடம் இருப்பதை அச்சந்தர்ப்பங்களில் அவதானித்தேன். அவரிடம் உள்ள திறமைகளையும், அனுபவங்களையும் நாடகப் பட்டறை மூலம் வெளிக் கொண்டுவந்து, அவற்றை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது தற்போதைய ஆசை. அது மற்றவர்களின் ஆசையாகவும் இருக்கக்கூடும்!

செவிக்கு விருந்து தரும் அண்ணை றைற் போன்ற இறுவட்டு, பல நல்ல மனம் கொண்ட நண்பர்களின் உதவியால் இன்று வெளிவந்திருப்பதைப் போல, கண்ணுக்கு விருந்தளிக்கும் காணொளி ஒளிவட்டுக்களும் அவருடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தாங்கி விரைவில் வெளிவர ஆவன செய்யவேண்டும் என்று ரசிகர்களாகிய நாங்கள் அவரிடம் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக ரீ.வீ.ஐயில் காண்பிக்கப்படும் வைத்திலிங்கம்சோ போன்ற நகைச்சுவை காட்சிகள் அடங்கிய ஒளிவட்டு வெளிவந்தால் சர்வதேசத்திலும் பரந்து வாழும் தமிழர்களை அது மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. புகழ் பெற்ற நல்ல கலைஞர்களை வாழும்போதே கௌரவிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்டட கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. எமது இனத்தவரை, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களை, நாமே முன்னின்று பாராட்டத் தயங்கினால் வேறுயாரும் பாராட்ட முன்வரப் போவதில்லை. பாலா அண்ணா நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தனது நகைச்சுவை நடிப்பு மூலம் எங்களை மகிழ்விக்க வேண்டும்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் நூல் வெளியிட்டு விழா


தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான நூல்கள் இது வரையும் தமிழ் மொழியில் வெளி வரவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கத்தால் 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட இப்பாடத்திற்க்கு இவ் ஆண்டு மார்கழி மாதத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பாரிய பொறுப்பை யார் நிறைவேற்ற போகின்றார்கள் என்ற கேள்வி எழுந்து இருந்த வேளையில் அதற்க்கு முற்று புள்ளி வைத்திருக்கின்றார் ஆசிரியர் கே.ஆர்.சுகுமார் அவர்கள்.

கடந்த 06-10-2007 அன்று வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் சைவ புலவர் சு.செல்லத்துரையின் தலைமையில் இடம் பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில். முதற் பிரதியை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.எஸ்.தில்லை நடராசா அவர்கள் வெளியிட்டு வைக்க தினக்குரலின் அதிபர் திரு.எஸ்.பி.சாமி அவர்கள் பொற்று கொண்டார்.

முதன்மை விருந்தினராக பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம் அவர்களும் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்கினர். நூலின் நயப்புரையை இலங்கை ரூபவாகினி கூட்டுதாபனத்தின் “ஐ” அலைவரிசையின் ஆலோசகரும். விஞ்ஞான தொழில் நூட்ப அமைச்சின் தகவல் தொழில் நுட்ப்ப ஆலோசகருமான திரு.யோகராஜ் நிகழ்த்தினர்.

2006ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இப்பாடத்திற்கான முதலாவது பரீட்சை இந்த ஆண்டு (2007) மார்கழியில் நடை பெறவுள்ளது. எனவே தமிழ் மொழியில் ஒரு நூல் வரவேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்து சுகுமார் அவர்கள் இன் நூலை வெளி கொண்டு வந்திருக்கின்றார்.

இது வரைகாலமும் கணனி கற்கின்ற மாணவர்களுக்கு தமிழில் ஒரு நூல் வெளி வராதது பெரும்குறைபாடக இருந்தது. அனால் இன்று தமிழில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப்பம் என்ற நூல் வெளி வந்தது மிகவும் மகிழ்ச்சியான விடயம்மாகும்.

இந்த நூல் எழுதுவதற்க்கு கூடிய தகவல்களை கூறிகிய காலத்திற்க்குள் திரட்டியிருப்பது. நூலை வாசிக்கும் போது புரிகின்றது. பரீட்சையில் ஈடுபட போகின்ற மாணவர்களுக்கு நூல் பயன் பெற வேண்டும் என்ற நோக்குடன். மிகவும் கடினமான உழைப்பினால் இந்த நூலை வெளிக் கொண்டு வந்துள்ளார். நூலின் ஆசிரியர்.

இன்னும்மொர் விடயத்தை இங்கு கூறிப்பிட வேண்டும். விழா மேடையில் வைத்து 400நூல் பிரதிகள் மாணவர்களுக்கு அன்பளிப்புக்கு உறுதுனை வழங்கிய தொழில் அதிபர்களையும், இன் நூல் வெளி வர உழைத்த உள்ளங்களையும் பாரட்ட வேண்டும்.

வெளியீடு
கே.ஆர்.சுகுமார்
கணனிப்பிரிவு
கொக்குவில் இந்து கல்லூரி

விலை- 350.ரூபா (இலங்கை)

மல்லிகையின் 43வது ஆண்டு மலருக்கு ஆக்கங்கள் கோரல்



இலங்கையில் இருந்து வெளிவருகின்ற மல்லிகை சஞ்சிகை
தனது 43வது ஆண்டு மலரை வெளியிடவுள்ளது.

இம் மலருக்கான வேலைகள் ஆரம்மாகியுள்ளது.

இம்மலருக்குபடைப்புகளை அனுப்ப விரும்புவோர் வெகு விரைவாக அனுப்பி
வைக்குமாறு மல்லிகை ஆசிரியர் கேட்டுள்ளார்.

அனுப்ப வேண்டிய முகவரி

201-4 sri kathiresan st
colombo-13
sri lanka

தொலைபேசி
0094112320721

இனையதள முகவரி
mallikaijeeva@yahoo.com

கனடாவில் ''அண்ணை றைற்''




உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உள்ளங்களின் அபிமானத்தைப் பெற்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட அவருடைய ஐந்து தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள் கனடாவில் டொரொன்ரொ மாநகரில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரர் அவை மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது.

இலங்கையின் முதலாவது தமிழ் தனி நடிப்பு அண்ணை றைற்" இவ்வாண்டு 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதே வேளையில் 2006ம் ஆண்டுடன் கே.எஸ் பாலச்சந்திரன் கலைத்துறைக்கு வந்து 40ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1973ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதியன்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்.ஆறாம் இலக்க கலையகத்தில் பார்வையாளர்களுக்கு முன்னால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட "கும்மாளம்" நிகழ்ச்சியில் முதன்முதலாக நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலும் பல மேடைகளிலும்இ 1974ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டின் போதும் அரங்கேறியது.

ஒலிப்பதிவு நாடவாக உலகெங்கும் வாழும் தமிழ் அன்பர்கள் வீடுகள் எல்லாம் சென்றடைந்த " அண்ணை றைற்"அதன் தொடர்ச்சியாக உலகின் பல நாடுகளிலும் நேரடியாக மேடையேறியது.

1989ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலும் சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரிலும் கே. எஸ். பாலச்சந்திரன் நேரில் தோன்றி " அண்ணை றைற்" நகைச்சுவை விருந்தளித்தார்.

34 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ய ஒலித்தட்டாக வெளி வருகிறது.

‘’அண்ணை றைற்’’ கலை துறையில் நாற்பது வருடங்கள்



சுமார் பத்து வருடங்களுக்கு முன். வயறு குழுங்க குழுங்க சிரித்து நாடங்களை ரசித்த இனிமை இப்போது உண்டா? என்று நோக்கும் போது. அவை இப்போது மறைத்து போய் கொண்டு இருக்கின்றது என்றும் கூறலாம்.

இதற்க்கான காரணத்தை நோக்கும் இடத்து ரசிகர்களின் ரசிப்பு தன்மை இப்போது இல்லையா? அல்லது நகைச்சுவை நாடங்களின் வருகை இல்லையா? எனக் கேட்கத் தோன்றுகின்றது. இல்லாவிடில் தினம் தினம் சோகத்தில் முழ்கியுள்ள இன்றைய மக்கள் எப்படிதான் சிரிப்பதோ?

ஆனால் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும். இன்றைக்கும் மனதில் இருந்த சோகங்கள் எல்லாம் மறைந்து புத்துனர்ச்சியை தரும் நாடங்களிள் பல. அவற்றில் ஒன்றுதான் ‘’அண்ணை றைற்.’’

இலங்கையில் ‘’அண்ணை றைற்’’ என்ற தனி நடிப்பு நாடகத்தின் மூலம்தான்; தனி நடிப்பு அறிமுகம்மானது. இந்த நாடககர்த்தா யார் என்றால் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்ட நடிகர். கே.எஸ். பாலச்சந்திரன் தான்.

கடந்த 2006ம் ஆண்டுடன் இவர் கலையுலகிற்க்கு வந்து நாற்பது ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந்த கலைஞனை பற்றி சிறு அறிமுகம்.

யாழ்ப்பாணம் கரவெட்டி கிழவி தோட்டத்தில் திரு-திருமதி சுப்பிரமணியம் அவர்களுக்கு மூத்த மகனாக பிறந்தார். கே.எஸ். பாலச்சந்திரன் ஊர் மக்களால் கணேஸ் என்று அழைக்கப்பட்டார்.

சிறு வயது முதல் படிப்பிலும் கலைத் துறையிலும் அதிகமாக ஈடுபாடு காட்டினார். பாடசாலை நாட்களில் பல நாடங்களில் நடித்தார். இந்த நாட்களில் தான் பேராசியர் சிவத்தம்பியின் தொடர்பு கிடைத்தது.



இவர் பாடசாலை கல்வியை முடித்து கொண்டு இலங்கை இறைவரி திணைக்களத்தில் கடமையாற்றினார். இந்த கால பகுதியில் அங்கு பணிபுரித்த புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். கணேசபிள்ளையுடன் பழக்கம் எற்பட்டு அவருடன் இனைத்து பல நாடங்களில் நடித்தார்.

1967ம் கால பகுதியில் ஆண்டு இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினார். 1970ம் ஆண்டு ‘’அண்ணை றைற்’’ கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்டு மக்கள் முண்ணிலையில் தனி நடிப்பாக நடிக்கப்படடது.


இதற்க்கு பின் இலங்கையின் பல மாவட்டங்களிலும் வெளி நாடுகளிலும். மேடையேறின. இந்த ‘’அண்ணை றைற்’’ நாடகம். இத் பெருமைக்குரிய நடிகர் கே.எஸ். பாலச்சந்திரன் தொலைக்காட்சி நடிகரும் கூட இலங்கையில் வெளியான ‘’வாடைக்காற்று’’ என்ற படத்திலும். அண்மையில் கனடாவில் வெளியான ‘’உயிரே உயிரே’’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு பெருமை சேர்த்த பல நாடங்கள் இப்போதது ஒலி இழைகளாக வந்துள்ளது. அவையவான ‘’வாத்தியார் வீட்டில்’’ (பாகம் 1,2,3) ‘’அண்ணை றைற்’’ போன்றவையாகும்.

இப்படியான கலைஞனை கலை குடும்பம் கௌரவிக்கவுள்ளது. கடந்த 2006ம் ஆண்டுடன் கே.எஸ். பாலச்சந்திரன் கலைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில். கனேடிய தமிழ் கலைஞர்கள் கழகம் , பாரதி புறொடக்சன்ஸ் வழக்கும் கே.எஸ். பாலச்சந்திரனின் ‘’அண்ணை றைற்’’ முதலான தனி நடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இறுவெட்டு (cd) வெளியீட்டு விழா ஒக்டோபர் மாதம் 7ம் திகதி ஞாயறுக்கிழமை scarborough civic centre மண்டபத்தில் இடம் பெற்றது.