இலங்கையில் இருந்து இளையதம்பி தயானந்தாவை ஆசிரியராக கொண்டு இருக்கிறம் என்னும் பெயரில் இருமாத இதழ் ஒன்று வெளிவரத் தொடங்கி உள்ளது.
இலங்கையில் ஜனரஞ்ச இதழ்கள், சிறு சஞ்சிகைகள், பத்திரிகைகள் என வருவது அவை சில பிரசுரங்களுடன் நின்று விடுவது ஒரு சாபக்கேடு. மிகப் பெரிய பத்திரிகை நிறுவனமான வீரகேசரி கூட, 70களில் வெளியிட்டு வந்த வீரகேசரி மாதாந்த நாவலை கூட நிறுத்தி விட்டு இருந்தது இதற்கு மிக சிறந்த உதாரணம்.
எனினும் இருக்கிறம் சற்று நம்பிக்கையோடு வெளி வருவது போல் தெரிகின்றது. இளையதம்பி தயானந்தா இவ்வாறான சில பிரசுரங்களுடன் நின்று விடுவது குறித்து தனது இரண்டாவது இதழில் குறிப்பிட்டு இருப்பது அதற்கான அவரது தயார் படுத்தலை குறிக்கிறது.
விற்பனையை அதிகரிப்பதற்கு முதல் பிரசுரத்தில் “சிவாஜி” ரஜியினின் படத்தையும், இரண்டாவது பிரசுரத்தில் ஐஸ்வர்யா ராயின் படத்தை போடுவதை தவிர வேறு வழிகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கின்கிறார்.
எனினும் ஆக்கங்களில் சோரம் போகவில்லை. முதல் இதழ் கைவசம் இல்லாத காரணத்தினால் இரண்டாவது இதழில் வந்தவற்றை குறிப்பிடுகின்றேன். த.ஜெயசீலன், கவிஞர் செ.குணரத்தினம், தி.திருக்குமரன் ஆகியோரின் கவிதைகளும். கிண்ணியா அமீர் அலி, சரவணன், அமிர்தகழியான், ஆகியோரின் சிறுகதைளும், கே.எஸ். பாலச்சந்திரனின் வானொலி கால நினைவுகள், பனையடிப்பக்கம், சோக்கெல்லோ சண்முகத்தின் பட்சமுள்ள ஆச்சிக்கு என்பன தொடராக வருகின்றன. பசீனா சலீம், பிரபா ஆகியோரின் கட்டுரைகளும், ஐஸ்வர்யா ராய் நடித்த provoked திரைப்படம் பற்றிய பார்வையும், ஏராளம் துணுக்களும் வந்திருக்கின்றது.
பக்க வடிவமையிலும் அசத்தி இருக்கின்றார்கள். அனைத்தும் வர்ணபக்கங்களில் வந்திருக்கிறது.அறிமுக விலை 40 இலங்கை ரூபாய்கள்.
இரண்டாவது இதழில் சக பதிவரான தமிழ்நதியின் வாசகர் கடிதமும் வந்திருக்கிறது.
மேலதிக விபரங்கள்
ஆசிரியர்
இளையதம்பி தயானந்தா
நிர்வாக ஆசிரியர்
மனோ ராஜசிங்கம்
ஆசிரியர் குழு
எஸ்.ரஞ்சகுமார்
சாந்தி சச்சிதானந்தம்
அப்துர் ரகுமான்
வ.சிவஜோதி
தொடர்புக்கான முகவரி
3டொரிங்டன் அவனியூ
கொழும்பு-07 .
தொலைபேசி
0094602150836
தொலைநகல்
irukkiram@gmail.com
Malaysia - Facts At A Glance
-
*Official Name -The Federation of Malaysia*
*Malaysia's Land Area - *Malaysia consists of two areas of mainland,
separated by the South China Sea, namely W...
14 years ago
19 comments:
வாழத்துக்கள் நண்பரே.வரவேற்கிறோம் உங்களையும் இருக்கிறமையும்.
சஞ்சிகை கிடைத்தது. அபாரம்.
நல்லதொரு வடிவமைப்பும், உள்ளடக்கமும்.
இருக்கிறம், நீண்ட ஆயுளோடு இருக்கிறம் எண்டு சொல்லவைக்க வேணும்
வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி அகிலன் மற்றும் மாயா.
கானாப்பிரபா இருக்கிறமில் பிரபா என்னும் பெயரில் பயணக்கட்டுரை எழுதுவது நீங்களா?
எழுதுறம் ;)
ஆகா சத்தம் போடாம நைசா எழுதறியள் என்ன..சரி சரி எழுதுங்கோ வாசிக்கிறம்
நீடூழி வாழ்க!
வாழத்துக்கள்
யோகன்,சின்னகுட்டி நன்றிகள்
இதனாசிரியர்!
இளையதம்பி தயானந்தனா? தயானந்தாவா? இவர் தொலைக் காட்டியில் வேலைபார்த்தாரா?அறிய ஆவல்.
ஆம் யோகன். இளையதம்பி தயானந்தா தான் ''இருக்கிறம்'' சஞ்சிகையின் ஆசிரியர் இவர் நீங்கள் கூறும் அவர் தான் இவர் (தொலைக்காட்ச்சி, வானொலி அறிவிப்பளார்)
இருக்கிறம் தொடர்ந்து இருக்க வாழ்த்துகிறேன்.
ரஞ்சகுமாரிடம் மீண்டும் கோசலையை எதிர்பார்க்கிறேன்.
ஈழத்து தமிழ்கதையுலகில் கோசலை ஒரு புதுயுகம்.
ரஞ்சகுமார் தொடரவில்லை.
தொடரவேண்டுகிறேன். இன்னொரு புதுமுகமாக..
- கண்ணன் பாரிஸ்
இனிய நெஞ்சன் தாசனுக்கும் அவரது ஆரவாரத்துக்கும் 'இருக்கிறம்' தன் மிகப்பணிவான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. எம்மோடு இருக்கும் கானாப் பிரபா உள்ளிட்ட அனைவரினதும் கருத்துக்களூம், வாழ்த்துக்களும் மிக்க மகிழ்ச்சி தருகின்றன.அகிலன், மாயா,யோகன், சின்னக்குட்டி அனைவர்க்கும் அன்பு கூறி ம்கிழ்கிறோம்
இருக்கிறமும், இருப்பவர்களும் சார்பாக,
இளையதம்பி தயானந்தா
இருக்கிறம் வளர நிலை பெற வாழ்த்துக்கள்.
அப்படியே புலப் பக்கமும் அனுப்பினியள் எண்டால் ,பொருளாதார ரீதியாக தாக்குப் பிடிப்பியள்.
அற்புதன் உங்கள் அலோசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
'இருக்கிறம்' ஆரவாரத்தை வாழ்த்தியமை பெருமையாக இருக்குது.
Vanakam Thamil Maintharkalea
Nankalum eannrendum Unkaludan erukiram.
Thamil Pattulla Mintharea ,unthann muyatchi Neenda kalam Varlum.
Valthukall
VIJITHAN
Botswana
Dearest Thaya,
Unnthan Medai mulakameallam nanarivean.
Unn penaa valimaiyai vedavalla...
Needithu eruka valthukall.
Yarl Inthu Mainthan ...Botswanavil erunthu.
"இருக்கிறம்" என்ற பெயரே அது ஒரு நிகழ்கால பதிவுகளின் பொக்கிஷம் என்பதை உணர்த்துகின்றது. நீண்ட காலம் நிலைத்து "இருக்க" வாழ்த்துகள்.
-கலையரசன்
Kalaiyagam
http://kalaiy.blogspot.com
Post a Comment