அருகிப் போய்க்கொண்டிருக்கும் எமது நாட்டின் பாரம் பரிய நாட்டார் வழக்குகளுக்கு உயர் கொடுக்கும் வகையில் எழுத்தாளார் வல்வை ந.அனந்தராசா எழுதிய ‘வடபுல நாட்டார் வழக்கு’என்னும் நூலிலை அண்மையில் வாசித்தேன்.
சுமார் 30 வருடங்களுக்கு முன் ஆங்காங்கே ஒலித்துத்துக் கொண்டிருந்த. தாலாட்டுப் பாடல்கள், இளம்பெண்களின் கும்மிபப் பாடல்கள் , ஊஞ்சல் பாடல்கள், பாட்டிமாரின் விடுகதைகள், பழமொழிகள் என்பன. கேட்பவர்களின் சிந்தனைகளையும், சொல்லாட்சியையும் வளர்ப்பதில் எவ்வளவு தூரம் பங்கெடுத்துள்ளன என்பதை நினைக்கின்ற போதே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது.
அன்றைய நிலை மாறி இன்று முற்று முழுதாக எமது நாட்டார் வழக்குகள் இல்லாமல் போய் விடுமோ? என்ற அச்சம் தோன்றிய வேளையில் இந்த நூல் வெளி வந்து இருக்கின்றது. மகிழ்ச்சிக்குரிய விடயம்.
நாட்டார்பாடல்களில் பிரசவம்,தாலாட்டு.பூப்புனிதநீராட்டு விழா என ஒவ்வொரு பாட்டுக்கள் அது மட்டுமா? காதலர்கள் தங்களுக்கிடையே சந்திப்பை வைத்துக் கொள்வதற்க்கும் பாடல். இப்படியாக நூலாசிரியர் ஒவ்வொரு விடயத்திற்க்கும் சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார்.

2 comments:
இதை எங்கே வாங்கலாம்.
இப் புத்தகத்தை பூபாலசிங்கம் புத்தகசாலையில் பெற்று கொள்ள முடியும் அல்லது சேமமடு புத்தகசாலையில் கிடைக்கும்.
Post a Comment