''மனோலயம்''பாசத்திற்க்கு ஒரு நூல்


உடுவை எஸ்.தில்லைநடராசா,கம்பவரிதி ஜெயராஜ்.மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
திரு.வீ.ஏ.திருஞானசுந்தரம் உரை நிகழ்த்துகின்றார்.






1989ம் ஆண்டு கடைசி என்று நினைக்கின்றேன். 8வகுப்பில் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன்.ஒரு நாள் மாணவர்களுக்கு மகிழ்சியான செய்தி அதிபர் திரு.சிவபாத சுந்தரம் அவர்கள் ஒய்வு பெற்று செல்லுகின்றார் என்ற செய்தி. என்னும் சில ஆசிரியர்களின் வயதை நாங்கள் எண்ணிக் கொண்டு இருந்த காலம் அது. என் என்றால் அவர்களும் எப்போது ஒய்வு பெறுவார்கள் என்பதற்காக தான். அந்த அளவுக்கு அடி. உடற்பயிற்சி சேர் (உப அதிபர்), அதிபர் திரு. சிவபாத சுந்தரம், திரு.அம்பாலவாணர் சேர் (தற்போது கரவெட்டி கோட்ட கல்வி அலுவலர்) இவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தால் போதும் எல்லா மாணவர் அமைதியாகி விடுவார்கள். எந்த வகுப்பு மாணவர்கள் பிழை விட்டாலும் மேற் குறிப்பிட்டவர்களிடமே அனுப்புவார்கள். அவர்கள் இறுதி தண்டனை வழங்குவார்கள். அவர்களின் அடியை விட அவர்களின் பேச்சை(திட்டு) தாங்க முடியாது. என் என்றால் கூடுதலான மாணவர்களின் பெற்றோர்கள் அந்த கல்லூரியில் கல்வி கற்று இருந்தரர்கள். அவர்களுக்கு படிப்பித்த பெருமை உப அதிபருக்கும் , அதிபருக்கும் சாரும் எனவே யார் ? யாருடைய பிள்ளை என்று அறிந்து இருப்பார்கள.; அதனால் விசேடமான பூசை எங்களுக்கு வழங்கப்படும். காலையில் கூட்டு பிரத்தனையின் போது தேவாரம் முடிய நாங்கள் இறுதியாக கடவுளிடம் வேண்டுவது. அந்த ஆசிரியர் இன்டைக்கு வரக் கூடாது. இந்த ஆசிரியர் நானைக்கு வரக்கூடாது என்று.

அன்று அதிபர் திரு.சிவபாதசுந்தரம் அவர்களின் பிரியா விடை நிகழ்வும், புதிய அதிபரின் வரவேற்பு நிகழ்வும், அன்றுதான் அதிபரின் பிரிவை தாங்க முடியாது அழுதோம்.(உண்மையாக நம்பினால் நம்புங்கோ) புதிய அதிபரும் கல்லூரியின் பழைய மாணவன்தான். திரு.வை. செல்வராசா (தற்போது வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர்) இறுதியாக அதிபர் திரு.சிவபாத சுந்தரம் அவர்கள் எம் முன்னே உரையாற்றிய போது பல பழைய மாணவர்களின் பெயர்களை கூறிப்பிட்டு அவர்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்கள் என்றும் கூறினார்.


அண்மையில் எனது மாமாவின் வீட்டில் ஒரு புத்தகம் இருந்தது. பொதியை உடைக்கும் உரிமையை (நூல்கள் மட்டும்) எனக்கு தந்தார் மாமா. நூலின் பெயர் “மனோலயம்” எழுதியவர் வீ.ஏ.திருஞானசுந்தரம். என்ன நூல் இது? யார் இவர்கள்? என்று மாமாவை குடைகின்றேன். இலங்கை வானொலியின் புகழ் பெற்ற கலைஞர்கள் , கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர்கள். என்ற தரவை தந்து விட்டு அவர் கோவையில் மூழ்கினார்.

நான் ‘’மனோலயம்” நூலில் மூழ்கின்றேன். இது ஒரு பாசத்திற்க்கான நூல். தம்பியை பற்றி அண்ணா எழுதும் ஒவ்வொரு வரிகளும் வாசகனை உருக வைக்கும். (இதை தான் ஒரே இரத்தம் என்பார்களோ) முதலில் யார் இந்த அண்ணா?இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் முதல் தமிழ் பிரதிப்பணிப்பாளர் என்ற பெருமைக்கு உரிய திரு.வீ.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் தான் இந்த நூலின் ஆசிரியர். பல கலைஞர்களை வெளிக்கொண்டு வந்த பெருமை இவருக்கு சாரும் இதனை விட தமிழன் என்பதால் சிலருக்கு கிடைக்காது இருந்த பதவிகள் அவர்களுக்கு மீண்டும் கிடைக்க வழி சமைத்தவார்.

இப்படியும் ஒரு பாசமா?இது எனக்குள் எழுந்த கேள்வி இந்த நூலை வாசிக்கும் போது “வானத்தை போல” என்ற படம் பார்த்த ஞாபகம் வந்தது. ஆனால் நான் இங்கு இப்போது நியத்தில் “வானத்தை போல” ஒரு குடும்பத்தை பார்க்கின்றேன். இந்த குடும்பமே கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் வாரிசுகள்.

திருஞானசுந்தரம் அவர்களுக்கு ஒரு அண்ணா அவர்தான் திரு.வீ.ஏ.சிவஞானம். இலங்கையின் “அன்னை” வானொலி என அழைக்கப்படுகின்ற இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினை பிரபலமடைய செய்த கலைஞர்கள் வரிசையில் திரு.சிவஞானம் அவர்களின் பங்கு முக்கிய இடத்தை பெறுகின்றது. கிராமிய கலையை வளர்த்து எடுப்பதற்க்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். இவரின் நினைவாக ‘’சிவலயம்”
என்ற நூல் கடந்த ஆண்டு திருஞானசுந்தரத்தால் வெளியிடப்பட்டது.இதோ தம்பியின் நினைவாய் ‘’மனோலயம்’’ தம்பி மனோரஞ்சிதன் ஆரம்பத்தில் ஒவிய துறையில் அதிக ஈடுபாடு காட்டியதன் மூலம் இன்று அவரின் ஒவியங்கள் நிலைத்து நிற்கின்றது. மனோவும் வானொலி துறையில் செயற்பட்டு வந்துள்ளார். தனது திறமைகளை வேகமாக வெளிக்கொண்டு வந்தவேளையில் இளம் வயதில் காலமாகி விட்டார். அனால் அவர்ரின் ஒவியங்கள் காலத்தால் அழியமல் அண்ணா என்னும் கோயிலால் நிற்கின்றது.


விக்கினேஸ்வார கல்லூரியில் சிலர் கல்வி கற்றதால் அந்த சில பேரால் கல்லூரிக்கு பெருமை என்று நாங்கள் கூறினாலும். அந்த கல்லூரியில்நாம் கல்வி கற்றதால் நாங்கள் பெருமை அடைகின்றோம் என்று கூறுகின்றார் பேராசிரியர் திரு.சிவத்தம்பி அவர்கள். இவர் ‘’மனோலயம்’’ நூலில் “அழியா இளமை” என்ற தலைப்பில் எழுதிய குறிப்பில் இருந்து சிறிய பகுதியை தருகின்றேன்.

இந்த நூலைப் புரட்டிப்பார்க்கும் பொழுது தான் விடயம் தெரியவருகிறது. சிறுவனாகவே கொழும்புக்கு வந்த மனோரஞ்சிதன் ஏறத்தாழ 1962-1970 காலப்பகுதியில் தன் கலையிருப்பை பதிவு செய்தார் அந்த கால கட்டத்தில் குறிப்பாக 1967முதல் 1970களில் நான் வெளிநாட்டிலிருந்தேன். 1970 இலேதான் மனோரஞ்சிதனின் வாழ்க்கை முற்றிளும் எதிர்பாராத வகையில் முடிவுற்றது.

ஏறத்தாழ 37 வருடங்களின் பின்னர் வெளிவருகின்ற இந்த நூல் மனோரஞ்சிதனின் ஒவியத்துறை ஆற்றiலையும், குறிப்பாக, கார்ட்டூன் சித்திரத்துரையில் அவருக்குள்ள வரலாற்று முக்கியத்துவத்தையும் தெரியப்படுத்துகின்றது. என குறிப்பிடுகின்றார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

இந்த நூலில் மனோரஞ்சிதனின் ஒவியங்கள், சிறுகதை, என்பன இடம் பெற்றுள்ள. இந்த நூலின் இறுதியில். “காற்றைக் கருவி கொண்டு கலைபடைத்த வித்தகர்கள்” என்ற தலைப்பில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் கடமையாற்றிய கலைஞர்கள்,அறிவிப்பாளர்கள் என 48 பேர்ருடைய படங்களும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவர்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மொத்ததில் இந்த நூல் அரிய பொக்கிசம் என்பதில் ஜயம் இல்லை.

3 comments:

said...

வணக்கம் தாசன்

கடந்த 2 வாரம் முன் வீரகேசரியில் இந்நூல் வெளியீட்டு விழாப் புகைப்படங்கள் வந்திருந்தன. ஆனால் நூல் பற்றிய விபரங்கள் இல்லையே என்று நினைத்தேன். தற்போது உங்கள் நிறைவான பதிவு இதை ஈடுசெய்துள்ளது. மிக்க நன்றி.

said...

பிரபா அண்ணா உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

said...

திரு சிவபாதசுந்தரம் ஹாடட்லிக் கல்லூரியில் எனது விலங்கியல் ஆசிரியர். இன்று வைத்தியனாக இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். திரு அம்பலவாணர் எனது நண்பர். பருத்தித்துறையில் அறிவோர் கூடல் நடந்தபோது அவரும் ஒரு முக்கிய உறுப்பினர். பழைய ஞாபங்களை உங்கள் பதிவு கிளறிவிட்டது. நன்றி