ஒரே மேடையில் 8நூல்கள் வெளியீடுதமிழ்நாட்டில் கவிஞர் பா.விஐய் எழுதிய 10நூல்கள் கவிஞர் கருணாநிதி அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ் விடயம் வாசகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட விடயமாகும்.

ஆனால் இலங்கையில் இப்போது நிலவுகின்ற இறுக்கமான நிலமையில் ஒரு புத்தகம் வெளியிடுவது என்றால் மிகவும் கஷ்டமான விடயமாகும். ஆனால் ஒரே மேடையில் 8நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிக்குப்பு மையமும், மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முத்தமிழ் மன்றமும் இணைத்து நடாத்திய ஓ.கே.குணநாதன் எழுதிய 8நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 23-10-2007 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.


ஓ.கே.குணநாதன் எழுதிய

1) பிஞ்சுக் கால்கள்-(சிறுவர் கதை)

2)அம்மா – (சிறுவர் கதை)

3)சங்கருக்கு பிறந்தநாள்-(சிறுவர் கதை)

4)tender leg –(சிறுவர் கதை)

5)ஐயோ! காடு எரியுது....!-(சிறுவர் கதை)

6)குயில் அம்மா –(சிறுவர் கதை)

7)நாளைய தீனி- (சிறுகதைத் தொகுப்பு)

8)ஆடித்தீ –( நாவல்)

என்ற 8நூல்களும் எழுத்தாளரும் சக வலைப் பதிவாளருமான உடுவை எஸ். தில்லைநடராசா அவர்களால் வெளியீட்டு வைக்கப்பட்டது.
4 comments:

said...

தகவலுக்கு நன்றி தாசன்

முடிந்தால் இப்படியான தகவல்களுடன் படங்களையும் இணையங்கள்.

said...

தமிழில் குழந்தைகளுக்கான எழுத்து முயற்சிகள் அருகிப்போய்க்கொண்டிருக்கும் காலத்தில் நல்ல செய்தி.

said...

நன்றி அண்ணா. படம் எடுத்து போடுவதற்க்கு முயற்ச்சி செய்து கொண்டு இருக்கின்றேன். படம் கிடைத்தவுடன் போடுகின்றேன்.

said...

"தமிழில் குழந்தைகளுக்கான எழுத்து முயற்சிகள் அருகிப்போய்க்கொண்டிருக்கும் காலத்தில் நல்ல செய்தி"

தமிழ்நதி வருகைக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் இது ஒரு நல்ல எழுத்து முயற்சி தான்.