கனடாவில் ''அண்ணை றைற்''
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உள்ளங்களின் அபிமானத்தைப் பெற்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட அவருடைய ஐந்து தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள் கனடாவில் டொரொன்ரொ மாநகரில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரர் அவை மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது.

இலங்கையின் முதலாவது தமிழ் தனி நடிப்பு அண்ணை றைற்" இவ்வாண்டு 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதே வேளையில் 2006ம் ஆண்டுடன் கே.எஸ் பாலச்சந்திரன் கலைத்துறைக்கு வந்து 40ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1973ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதியன்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்.ஆறாம் இலக்க கலையகத்தில் பார்வையாளர்களுக்கு முன்னால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட "கும்மாளம்" நிகழ்ச்சியில் முதன்முதலாக நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலும் பல மேடைகளிலும்இ 1974ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டின் போதும் அரங்கேறியது.

ஒலிப்பதிவு நாடவாக உலகெங்கும் வாழும் தமிழ் அன்பர்கள் வீடுகள் எல்லாம் சென்றடைந்த " அண்ணை றைற்"அதன் தொடர்ச்சியாக உலகின் பல நாடுகளிலும் நேரடியாக மேடையேறியது.

1989ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலும் சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரிலும் கே. எஸ். பாலச்சந்திரன் நேரில் தோன்றி " அண்ணை றைற்" நகைச்சுவை விருந்தளித்தார்.

34 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ய ஒலித்தட்டாக வெளி வருகிறது.

2 comments:

said...

தகவலுக்கு நன்றி

நாளை சமகாலத்தில் அவுஸ்திரேலியாவிலும் வெளியீடு செய்கின்றோம், படங்கள் பின்னர் வரும்.

said...

நன்றி அண்ணா.
படங்களை அனுப்பி வைக்கவும்.