வினோதமான ஒலி உங்களுக்கு வருகின்றதா? வெந்தயம் சாப்பிடுங்கோ!

அன்பான உறவுகளே. நான், நீங்கள் எல்லாம் அம்மாவின் கையால் சாப்பிட்டு எத்தனை வருடங்கள். அம்மா பார்த்து பார்த்து சமைத்த சாப்பாட்டின் சுவை சொல்லவா வேண்டும்.

அக்காமாரே நான் உங்களை குறை சொல்ல வில்லை. நீங்கள் உங்கள் கணவர்மார்க்கு சமைத்து போடுவது “அமுதம்’’

என்டாலும் பார்ருங்கோ வீட்டு சாப்பாட்டை விட கடை சாப்பாடு தான் கூட நாங்கள் சாப்பிடுகின்றோம். இதற்கு அப்பால் அம்மாவின் சாப்பாடு போல் மனைவியின் கையால் சாப்பிடுவோர் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இப்போது எல்லாம் நேரத்துக்கு எற்ற வகையில் தான் சாப்பாடு. நாங்கள் காலமை வெள்ளவத்தையில் பஸ்சால் இறக்கினால் இராமகிருஸ்ணாவில் ஒரு வெட்டு. மதியம் பம்பலப்பிட்டியில் சரஸ்வதி கோட்டலில் வெட்டு இப்படி வெட்டு வெட்டு என்டு வெட்டி கடைசியாக கொட்டுகிறது. நாங்கள் இருக்கின்ற வீட்டை தானே.

வயறு குடைய குடைய போய் எத்தனை மணி நேரமும் இருந்தாலும் சரி வராது. வினோதமான ஒலிகள் மட்டும் வரும். இது எங்கே எப்போது என்று சொல்ல முடியாது. இது நாம் வேலை செய்யும் இடங்களில் கூட நிகழ்ந்து விடுகின்றன.


எமது சாப்பாட்டால் தான் இப்படி தோன்றுகின்றது. அதற்க்கு நாங்கள் சாப்பிடமல் இருக்க முடியுமா? என்று நீங்கள் கூற முனைவது தெரிகின்றது. அது தான் உங்களுக்கு ஒரு கை வைத்தியம் சொல்லுகின்றேன். கோபிக்க வேண்டாம் சிவபொருமானுக்கு முருகன் உபதேசம் செய்தவர் தானே என்னுடைய அலோசனையையும் கேளுங்கோ.

தேவையான பொருட்ங்கள்

1) ஒரு கிளாஸ்லில் சுத்தமான நீர்ரை எடுத்தல்
2) துப்பரவான வெந்தயம் (உங்களுக்கு தேவையான அளவு)

செய்முறை

1)இரவில் நீங்கள் நிந்திரைக்கு போகும் போது. உங்களுக்கு தேவையான வெந்தயத்தை எடுத்து. சுத்தமாக உள்ள கிளாஸ்லில் போட்டு அதற்க்கு மேல் நீரை விட்டு கிளாஸ்சை மூடி வைக்கவும்.

3) காலையில் எழுந்தவுடன் வாயை கொப்பளித்து விட்டு. கிளாஸ்சில் உள்ள வெந்தயத்தை எடுத்து “சப்பி” சாப்பிடவும். பின்னர் குளிர்ந்த நீரினை எடுத்து போதியளவு குடியுங்கள்.

4) 1மணி நேரம் பொறுத்து காத்திருங்கள். பின்னர் சென்று இருந்து பார்ருங்கள் எல்லாம் சுகமாக போகும். உடம்பும் உற்சாகமாக இருக்கும்.

4 comments:

said...

பரியாரியார்

உங்கட கைவைத்தியத்துக்கு நன்றி ;)

said...

பிரபா அண்ணா நான் சொன்ன மாதிரி செய்து பார்ங்கோ எல்லாம் சுகமாய் இருக்கும்.

said...

தாசன்!
நீங்கள் சொன்ன விடயம் மிக அருமையானது. ஆனால் கணனியுடன் குடும்பம் நடத்தும் இளைஞர்களுக்கு செய்முறை கூடிவிட்டது.
சாதாரணமாக வெந்தயம் வாங்கினால்; துப்பரவாக்கி கழுவிக் காயவிட்டு வைப்பது வழமை.(வெளிநாடுகளில் கூட)
அப்படியான துப்பரவான வெந்தயத்தைப் படுக்கப் போகுமுன் 1 மேசைக்கரண்டியளவை உள்ளங்கையில் கொட்டி வாயில் போட்டு ஒரு மிரடு நீர் குடிக்க, காலை சுகமாக அமையும்.
உங்கள் முறையில் சப்பிச் சாப்பிடுதல் கசப்புச்சுவையும்; நொழு நொழுப்பும்..ஓங்காளத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் அதனால் வெறுப்பேற்படும்.
மாதம் ஓர் தடவை வெந்தயக்குழம்பும் வைத்துச் சாப்பிடலாம்.
மீன்;நண்டுக்கு கட்டாயம் வெந்தயம் சேர்பது, மணம்,சுவை,உடல் நலத்துக்கு நன்று.
அத்துடன் வெந்தயம்.. சலரோகத்துக்கும் நன்று. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

said...

//அப்படியான துப்பரவான வெந்தயத்தைப் படுக்கப் போகுமுன் 1 மேசைக்கரண்டியளவை உள்ளங்கையில் கொட்டி வாயில் போட்டு ஒரு மிரடு நீர் குடிக்க, காலை சுகமாக அமையும்.
உங்கள் முறையில் சப்பிச் சாப்பிடுதல் கசப்புச்சுவையும்; நொழு நொழுப்பும்..ஓங்காளத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் அதனால் வெறுப்பேற்படும்//
வெந்தயத்தை உள்ளங்கையில் போட்டு,வாயில் போட்டு சப்பி சாப்பிட வேண்டும். அப்போது தான் நன்மை உண்டு. அண்ணா எல்லோருக்கும் வெந்தய கறி வைக்க வசதி இருக்குமா என்பது சந்தேகம் நீங்கள் சொன்ன முறையும் நன்று தான். இப்போது எல்லாம் நம்ம நாட்டில் இருந்து சுத்தமான வெந்தயம் (இங்கு கழுவி உலர வைத்து) பைகற் செய்து உங்கு அனுப்புகின்றார்கள் தானே மீண்டும் ஏன் கழுவ வேண்டும்?
நன்றி யோகன் அண்ணா இன்னும் சில தகவல்கள் தந்தமைக்கு.