யாழ்ப்பாணத்தில் உலகசாதனை

இலங்கை யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஒன்பது மணித்தியாலங்கள் பேசி உலக சாதனை படைக்கப்பட்டிருக்கின்றது.

உலக சாதனை வரலாற்றில் முதன் முதலாக தேவஸ்தான வளர்ச்சி நிதிக்காக நிகழ்த்தப்பட்ட உலகசாதனை இதுவாகும். வடமராட்சி அருட்பதி அல்வாய் கோயில் தோட்டம் “சிறி ஜெகதீஸ்வரம் தேவஸ்தானம்” திருப்பபணி நிதிக்காக இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

திரு.அழகு ஜெகதீஸ்வர தேசிகர் என்பவரே உலக சாதனை படைத்தவர் ஆவார்.

“மகாபாரதம்’’ என்னும் பொருளில் கடந்த 01-10-2007 அன்று காலை 8மணி தொடக்கம் மாலை 5மணிவரை தொடர்ச்சியாக பேசி இச் சாதனையைப் படைத்துள்ளார்.


இச் சாதனை நிகழ்வுக்கு நடுவர்களாக திரு.தங்கமயில், செல்வி சுகுணா, டாக்டர் கதிரவேற்பிள்ளை, பண்டிதர் எஸ். வேலாயுதம், அதிபர் கி. நடராஜா, அதிபர் சிவநாதன்,ஆகியோர் கடமையாற்றினர்.

ஐக்கிய நாடுகள் சபையில் கியூபா ஜனாதிபதி பிடல் கஸ்ட்றோ 4-அரை மணித்தியாலம் பேசி நிகழ்த்திய உலக சாதனையை 2002ம் ஆண்டு எமது நாட்டு கலைஞர் திரு.சோக்கல்லோ சண்முகம் அவர்கள் “இலக்கிய நயம்” என்னும் பொருளில் 7-அரை மணித்தியாலங்கள் பேசி முறியடித்தார். இச் சாதனையை இப்போது 9மணித்தியாலங்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

நன்றி
வீரகேசரி(வார மலர்)
14-10-2007

5 comments:

Anonymous said...

யாழ்பாணத்திற்கு ஏற்ற சாதனைதான். பேச்சு திறனுக்கு ஒன்பது மணி நேரம் என்பது யாழ்பாணத்தை பொறுத்தவரை குறைவானது. ஆகக் குறைந்தது 36 மணி நேரம் ஆவது எதிர்காலத்தில் யாழ்பாணத்தில் பேசி சாதனை படைக்க கூடிய வல்லமை இருக்கின்றது.

said...

உங்களின் ஆசை வெகு விரைவில் நிறைவேறும்.

Anonymous said...

யாழ்ப்பாணத்தில் பேசி பேசிக் காலங்கழிக்கும் கூட்டத்திற்காக தட்டுப்பாடு?
வெங்காயங்கள்

Anonymous said...

சாதனையாளர்
திரு.அழகு ஜெகதீஸ்வர தேசிகர் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

said...

வருகைக்கு நன்றி