சென்ற வார வலைப்பூக்களில் ''பஹீமாஜஹானின் கவிதைகள்''

சென்ற வாரம் ''தினக்குரல் வாரமலரில்'' வலைப்பூக்கள் பகுதியில் இவரின் வலைப்பதிவு மலர்ந்துள்ளது.


1990களில் எழுத்துதுறைக்குள் நூழைந்த பஹீமா அவர்கள். இது வரைக்கும் பல கவிதைகளை எழுதியுள்ளார். குருநாகல் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஒரு கணித ஆசிரியர்ராக பணியாற்றும் இவரின. கவி ஆற்றலை வெளிப்படுத்தும் முகமாக (ஒரு கடல் நீரூற்று) என்ற நூல் அமைந்தது. சஞ்சிகைளில் மட்டும் எழுதி கொண்டிருந்த இவர் தற்போது வலைப்பதிலும் தனது கவிதைகளை பதிவு செய்ய தொடங்கியுள்ளார்.

போட்டி போட்டுகொண்டு இவரின் கவிதைகளை பிரசுரம்செய்யவும் ,தங்களின் இணையதள சஞ்சிககைகளிலும் பதிவு செய்யவும் விருப்பம் கொண்ட இலக்கிய கூட்டத்துக்குள் முழுமையாக சிக்காமல் தனது தனித்துவான பதிவாக அமைய வேண்டும் என்ற விருப்பில் இவர் தனக்கேன ஒரு வலைப்பதிவை உருவாகியது மிகவும் பாரட்ட கூடிய விடயமாகும்.

இவரின் கவிதைகளை படிக்கும் போது. தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகின்றது. இவர் பதிவு செய்துள்ள சில கவிதைகளின் பகுதிகளை தருகின்றேன்.

ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி
கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும்
மாலைப் பொழுதொன்றில்
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி.
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.
நானும் தொடர்வேன்இ
தோட்டத்து ஒற்றையடிப் பாதையின் சருகுகளைச்
சிறு மண் வெட்டியால் இழுத்தவாறு
அவள் பின்னே

இவரின் இக் கவிதையை படித்த எனக்கு இவரின் ஆரம்ப பதிவுகளையும் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ''கோழிக்குஞ்சு ''என்ற கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சின்னஞ் சிறு வெண் சிறகிரண்டிலும்
புழுதி படியலாயிற்று:
பஞ்சு போன்ற அதன் உடலம்
ஒடுங்கிச் சிறுத்திற்று:
கூடி விளையாடிய அவளது பாதம்
தவறுதலாகக் குஞ்சின் தலை மீதேறியது:
கால்களும் உடலும் நெடுநேரம் நடுங்கிடச் சிறுமி
தனது பிரியம் துடிப்பதைப் பார்த்திருந்தாள்!
கரு முகிலே! உன் துளிகள் தூவி
அதன் மேனிக்கு வலுவூட்டு!
நீல விசும்பே!உன் குரல் கொண்டு
மீளாத் துயிலிலிருந்து அதையெழுப்பு!
வீசும் பவனமே!உனது மென் கரங்களால்
மூடிய இரு கண் மூடிகளைத் திறந்து விடு!
இனிய குஞ்சே ! வலிகளைக் காலடியில் விட்டு
குணமடைந்து எழுந்து விடு:
முறையிட்டாள் சிறுமி ஆகாயம் நோக்கி.

உயிர் பிழைத்த குங்சு
ஒரு கண் பார்வையிழந்து தவித்தது!
இடையில் தவறிய வழி தேடிக் கீச்சிட்டவாறு
எங்கோ எங்கோ பார்த்திருந்தது


மரணத்தின் நிழல் அதன் தலைக்கு மேலே
கவிழ்திருந்த காலைப் பொழுதில்
கடும் பிரயத்தனத்துடன் ஒரு சொண்டுத் தண்ணீரை
அண்ணாந்து குடித்தது
உலகில் அதற்கென ஆண்டவன் வைத்திருந்த
கடைசி நீர்த் துளி அது!

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!

இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!


இக் கவிதையை படித்து விட்டு உங்களின் கருத்தை பஹீமாவிடமே சொல்லுங்கள்.இன்னுமொர் கவிதை இக்கவிதையை பற்றி பேச எனக்கு தகுதியுண்டா என்று தெரிய வில்லை. நீங்களே படித்து பார்ங்கள்.

ஆண்களை மயக்கும்மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டீச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்இபிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!

உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!

நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!

எனவே கவிதை என்றால் இப்படிதான் இருக்க வேண்டும். என்று கூறும் போது பஹீமா வின் இந்த பதிவை சுட்டிக்காட்டலாம்.


இவரின் வலைப்பதிவை பார்வையிட -
www.faheemapoems.blogspot.com/

6 comments:

said...

அன்பின் தாசன்,

எனது அபிமான கவிதாயினியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே !
எளிதில் புரியும் விதத்தில்,அழகான,நல்ல கவிதைகளைத் தருகிறார் இவர்.
எந்தப் பாசாங்குமற்ற வரிகளில்,சுயத்தையும்,வலிகளையும்,நிர்ப்பந்தங்களையும்,யதார்த்தங்களையும் கவிதைகளாக வடிக்கும் இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.

said...

நண்பரே வாழ்த்துக்கு நன்றிகள்.

said...

அன்புள்ள தாசன்

உங்கள் பதிவைக் கண்டு மிகவும் மகிழ்தேன்.
மிக்க நன்றி.

said...

\உங்கள் பதிவைக் கண்டு மிகவும் மகிழ்தேன்.மிக்க நன்றி.\\

நன்றி அக்கா உங்கள் வருகைக்கு.

said...

சகோதரியின் கவிதைகளுக்கு நான் ரசிகன், வலைப்பூக்களில் அவர் அறிமுகம் அமைந்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இவரின் கவியாற்றல் இன்னும் பலரைச் சென்றடைய வேண்டுகின்றேன்.

said...

நன்றி பிரபா அண்ணா,