குருதியில் குளித்த எழுதுகோல்

ஒ......அந்த கொடிய கணங்கள்
என் இதயத்தில் கனக்கின்றன
இது உங்கள் இதயத்திலும் பதியட்டும்.......


பாவிகள் கொன்ற என்
பிஞ்சு சோதரனின் சட்டைப்பையில்
குருதியில் குளித்த எழுதுகோல் எழுதுவதில்எங்கள் எழைக்குடிசை அடுப்பில்
அரிசி வெத்தும் வேகாத வேளை.......
எல்லாவீடும் உண்டு உறங்கும் வேளையது
பள்ளியிலிருந்து வந்த தம்பி
பசியோடு ஆவலாதிப்பட்டுண்டு
ஆறும் வேளை........அக் கொடுகை நிகழ்ந்தய்யோ.


வானலையில் வந்த வல்லூகளின்
இரண்டு எச்சங்கள் விழுந்து சிதற
காதைக் கிழிக்கும் பேரோசை
குடிகள் பற்றி எரியும் சுவாலை
அதனிலும் மேலேழும் அவலக் குரல்கள்எரியும் குடிசை நோக்கி
என் கால்கள்விரைகின்றன
மனமோ சிதறி சுழன்றடிக்குது.


வெந்த குடிசையின் வெளியே
செல்ல பூளையின் சிவத்த தசை
வீடென்பது அதொரு கொங்கனவாய்‘’சின்னவன் சின்னவன்’’
என் மனம் கலங்குகின்றது
அங்கே அங்கே........ அந்தக் கொடுமை
உண்ட சோறு வெளியே
சோற்றுக் கிண்ணியில் மண்டைக் குழம்பு......


இனியும் எத்தை உயிர்ரோ....
வல்லூறின் பசிக்கு இரையாகுமோ?

2 comments:

Anonymous said...

குருதியால் உங்கள் கவிதை எழுதி விட்டிர்கள்.

சங்கரி

said...

நன்றி சங்கரி

உங்களை போன்றவர்களின் கருத்துகள் தொடரத்து தேவை.