‘’இருக்கிறம்’’ இதழ் 3

‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் 3வது இதழ் வெளியாகி விட்டது.
விஜய்யின் படத்தை அட்டைப்படமாக கொண்டு இது வெளிவந்து இருக்கின்றது.

வழமையான பல தொடர்களான பனையடிப்பக்கம், கே.எஸ் பாலசந்திரனின் வானொலிக் கால நினைவுகள், சோக்கல்லோ சண்முகத்தின் பட்சமுள்ள ஆச்சிக்கு என்பனவும் கோவிந்தராஜ், கீதாவாணி, கனிவுமதி , வெள்ளை உருவி, தர்மேந்திரா, ஆகியோரின் சிறுகதைகளும் த.ஜெயசீலன், வி.தயாபரன், ச.வால் ஆகியோரின் கவிதைகளும், சாந்தி அனுசா, பார்த்திபன் ,ரஹ்மான் ஆகியோரின் கட்டுரைகளும், வெளிவந்திருந்திருக்கின்றது. சிரித்திரன் பாணி நகைச்சுவைச் சித்திரங்களும் இரண்டு மூன்றும் இருக்கின்றது. ஒரு இடத்தில் சிரித்திரனில் வந்த சித்திரத்தை பயன்படுத்தி இருக்கின்றார்கள் (நன்றி கூறி) . வடிவமைப்பும் வழமை போலவே அசத்தல்தான்

9 comments:

said...

அறிமுகத்துக்கு நன்றி, முடிந்தால் ஒவ்வொரு ஆக்கம் குறித்த உங்கள் பார்வையை நாலு வரியில் குறிப்பிடலாம்.


//பாலாசந்திரனின்// pls correct this

said...

பிரபா,உண்மையிலேயே எல்லோருடைய ஆக்கங்களையும் வாசிக்க வில்லை. முக்கால் வாசி புத்தகம்தான் தாண்டி இருக்கிறது. இன்றைக்கு எப்படியும் வாசித்து விடுவேன் என நினைக்கின்றேன். அதன் பின் நிச்சயமாக ஒவ்வொருத்தரின் ஆக்கங்களையும் பற்றி எழுதுகின்றேன். பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

Anonymous said...

இருக்கிறம் தனது இணையத் தளத்தையும் ஆரம்பிக்கிறது என்ற ம்கிழ்ச்சியான செய்தி கிடைக்கிறது. முகவரி irukkiram.com

said...

//இருக்கிறம் தனது இணையத் தளத்தையும் ஆரம்பிக்கிறது என்ற ம்கிழ்ச்சியான செய்தி கிடைக்கிறது. முகவரி irukkiram.com //

தகவலுக்கு நன்றி அனானி. அது சரி இதுக்கும் அனானியாகவா வரவேணும்???

said...

தகவலுக்கு நன்றி

said...

//Chandravathanaa said...
தகவலுக்கு நன்றி//

வாருங்கள் சந்திரவதனா நான் நினைக்கிறேன் இப்போதுதான் நீங்கள் முதல் தடவையாக எனது வலைப்பதிவுக்கு வருகின்றீர்கள் என. உங்களின் வருகையும் தருகையும் தொடர வேண்டுகின்றேன்.

Anonymous said...

mr.thasan, you can sak mr. thirukkumaran about amuthan.what the news he has given to you are correct. விஜய் இந்திய செய்திகளையும் sex படங்களையும் வெட்டி ஒட்டும் ஒரு சஞ்சிகை.(இவர்களின் ஆங்கிலத் தினசரி தமிழர்களுக்கு எதிராக இனத்துவேசம் கக்குகின்றது) நடிகை பூஜாவின் sex படத்தை அட்டையில் போட்டு அவரது கைகளினால் வெளியிட வைத்தார்கள். அதன் பின்னர் இருக்கிறம் அதே பாணியில் sex சினிமா பிரபலங்களை அட்டையில்... என்ன கொடுமை இது. கத்துக்குட்டி அதிமேதாவி (உளறித்திரியும்) இளையதம்பி தயானந்தாவே ரஜனியையும் விஜய்யையும் அட்டையில் போடுகின்றார். சில கட்டுரைகள் எரிச்சலைத் தருகின்றன் காரணம் திரும்ப திரும்ப பழைய பல்லவிகள்.

Anonymous said...

இலங்கையில் இருந்து வரும் இதற்கு எங்களின் ஆதரவு மிக முக்கியம். கசப்பு மருந்தையும் இனிப்பு தடவி தான் தர வேண்டும். அது போல் தான் இதுவும். நான் நினைக்கிறேன் இது வெற்றி பெற்றால் நாம் ஆனந்த விகடனையும் குமுதத்தை
யும் ஒரரம் கட்ட முடியும்.

said...

உங்களின் ஆதரவு எங்களுக்கு மிகவும்தேவை. எமக்கு எதிர்ப்புத்தான் அதிகம். ஒரு நூலை வெளிக்கொண்டுவருவதற்கு எவ்வளவு வருந்தி உழைக்க வேண்டும். இலகுவாக விமர்சிக்க முடியும். அனைவரையும் திருப்திப் படுத்த முடியாது. ஆனால் உங்களின் ஆக்க பூர்வமான ஆதரவு மிகத்தேவை. உங்கள் ஆக்கங்கள் கருத்துக்கள் அனைத்தையும் அனுப்பி வைக்கவும். நன்றி
இருக்கிறம் சஞ்சிகை குழுவில் ஒருவர்