அமுதம் என்னும் சஞ்சிகை


இலங்கை கொழும்பிலிருந்து அமுதம் என்னும் சஞ்சிகை இன்று தொடக்கம் வெளிவர தொடங்கியுள்ளது.

இரு வாரத்திற்க்கு ஒரு முறை வரும் இந்த சஞ்சிகையில்அரசியல்,கலை,இலக்கியம்போன்ற
விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
இம் முறை வெளிவந்துள்ள சஞ்சிகையில். சந்திரிகா மீண்டும் களத்தில், நமீதாவின் காதல், கடத்தல்van, கமல் அவதாரத்தில் வழக்கு, இந்திய தமிழ் இராணுவம், கிழக்கு ரிப்போட், ஜெயம் ரவி- பரத் கொஞ்ச நேரம் போன்ற பிரதான விடயங்களுடன்.
பாலு மகேந்திராவின் (வடிகால்) என்.எஸ் -எம் - இராமையா(கோவில்) துசாந்தினி(மீண்டும் ஸ்டெல்லா) ஆகியோரின் சிறுகதைகளும் சூரியன் எவ்.எம்.மின் புகழ் பூத்த அறிவிப்பாளர் திரு. லோசன் - அவரின் மனைவி ஆகியோருடன் சந்திப்பு, உடுவை எஸ் - தில்லைநடராசா, உடப்பூர் வீரசொக்கன், ஆகியோரின் கட்டுரைகளும், திருக்குமரன், கவிதையும், பண்ணாமத்துக் கவிராயாரின் மொழிபெயர்ப்பு கவிதையும், நடன ஆசிரியை திருமதி- வாசுகி ஜெகதீஸ்வரனுடனான நேர் காணல் ஆகிய விடயங்களை அடங்கி அமுதம் மலர்த்துள்ளது.
சஞ்சிகையின் தொடர்புக்கு

ஆசிரியர்
மீரா செந்தில்

உதவி ஆசிரியர்கள்
சி.கே. முருகேசு
சென்னை கண்மனி
ஏ.ஆர்.வி
த.ஈஸ்வரராஜா
வி.க.சர்மிளா

முகவரி
அமுதம் பப்ளிகேசன்ஸ்
2ம் மாடி, சீகல் பிளாசா
11,ஆர்த்தர்ஸ் பளேஸ்
கொழும்பு – 04
இலங்கை

தொலைபேசி
0094115754800
தொலைநகல்
0094112553863

13 comments:

said...

அமுதம் அப்பட்டமாக குமுதத்தை பெயரிலும் சரி எழுத்துவடிவிலும்(Font) சரி அப்படியே கொப்பியடித்திருக்கின்றது. ஏன் இவர்களால் சுயமாக சிந்திக்கமுடியவில்லையா? ஐயோ பாவம் இவர்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியாது.

said...

//அமுதம் அப்பட்டமாக குமுதத்தை பெயரிலும் சரி எழுத்துவடிவிலும்(Font) சரி அப்படியே கொப்பியடித்திருக்கின்றது. ஏன் இவர்களால் சுயமாக சிந்திக்கமுடியவில்லையா? ஐயோ பாவம் இவர்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியாது//

இதை விட வித்யா அவர்களின் பேட்டிகளிடையே ஆங்கில சொற்களை கலந்து பயன்படுத்தி இருக்கின்றார்களே அப்பப்பா அப்படி ஒரு கலவை. தமிழ்நாட்டு பத்திரிகைகள் கூட அப்படி ஆங்கில சொற்களை பயன்படுத்துவது குறைவு. ஸ்ரேயாவின் படத்தை போடுவது விற்பனையை அதிகரிக்கும் என்பதற்காக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இதை என்னவென்று சொல்வது? முதலில் அந்த பக்கத்தை ஸ்கான் செய்து போட நினைத்தேன். இருந்து அடுத்த இதழ் வரைக்கும் பொறுத்திருப்போம் சில வேளை கருத்துக்களை ஏற்று மாறுவார்கள் அல்லவா என்று விட்டுவிட்டேன். எனினும் ஈழத்து வெளியீட்டு முயற்சிக்கு உறுதுணையாக வேண்டியது நாம் தானே.

said...

தாசன் இதுவரை இலங்கையில் இருந்து வெளி வந்த வந்துகொண்டிருக்கும் மல்லிகை ஞானம் சிரித்திரன் வெளிச்சம் போன்ற சஞ்சிகைகள் இதுவரை எந்த சினிமா நாயகிகள் நாயகர்கள் படங்களையும் அட்டையில் பிரசுரிக்கவில்லை. முதன் முதலில் விஜய் என்ற இந்திய இணையத்தளச் செய்திகளையும் படங்களையும் வெட்டி ஒட்டும் ஒரு சஞ்சிகை.(இவர்களின் ஆங்கிலத் தினசரி தமிழர்களுக்கு எதிராக இனத்துவேசம் கக்குகின்றது என்பது தனிக் கதை) நடிகை பூஜாவின் படத்தை அட்டையில் போட்டு அவரது கைகளினால் வெளியிட வைத்தார்கள்( அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது). அதன் பின்னர் இருக்கிறம் அமுதம் அதே பாணியில் சினிமா பிரபலங்களை அட்டையில் போடுகின்றார்கள். என்ன கொடுமை இது. ஆனானப்பட்ட இளையதம்பி தயானந்தாவே ரஜனியையும் விஜய்யையும் அட்டையில் போடும்போது ஏனைய கத்துக்குட்டிகள் போடுவதில் தப்பில்லை.

ஏற்கனவே சில அதிமேதாவிகள் ஈழத்திலிருந்து இன்னமும் தரமான இலக்கியம் வரவில்லையென வலையிலும் ஏனைய சில இடங்களிலும் உளறித்திரியும் பொழுது நாமும் அவர்களின் கருத்துக்கு ஒத்து ஊதுவதுபோல் இந்திய சஞ்சிகளைக் கொப்பியடிப்பது தேவையா?

said...

வந்தியத்தேவன் உங்கள் கருத்துக்கு நன்றி ஆனால் உங்களுக்கு ஒரு பதில் எழுத வேண்டும் என நினைத்தேன். இப்போது நேரம் இல்லை பின்னர் ஆறுதலாக எழுதுகின்றேன்.

said...

//வந்தியத்தேவன் உங்கள் கருத்துக்கு நன்றி ஆனால் உங்களுக்கு ஒரு பதில் எழுத வேண்டும் என நினைத்தேன். இப்போது நேரம் இல்லை பின்னர் ஆறுதலாக எழுதுகின்றேன். //

என்ன பதில் தாசன்
உடனே எழுதுங்கள். என்னில் ஏதும் தவறு இருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

said...

தவறு ஒன்றும் இல்லை.பதிவுகள் பற்றி பேச வேண்டும்.(கதைக்க)விரைவில் சந்திப்போம். மாயா ஒழுங்கு செய்வார் போல் தெரிகின்றது.

said...

தமிழக சாயல் இல்லாமல் பத்திரிகை,சஞ்சிகை இலங்கையில் உருவாக்கி வெகுசனப் பத்திரிகையாக்குவது இலகுவல்ல!
ஆனால் டொமினிக் ஜீவாவின் 'மல்லிகை',சாதித்துள்ளது.
அதற்கு லாப நோக்கற்ற சிந்தனைத் தெளிவு வேண்டும்.
அத்துடன் நம் வாசகர்களும் மாறி ஆகவேண்டும்.
அதுசரி...குமுதம் போல் 'நடுப்பக்க அழகி' போட்டு கிளுகிளுப்பும் தருகிறார்களா??
பத்துச் சஞ்சிகை வேண்டாம், ஒண்ணே ஒண்ணு...முறையாக வெளியிடுங்கள்...

said...

யோகன். அமுதம் சஞ்சிகை குறித்து பெரும் விமர்சனம் எழுந்துள்ளது. பெறுத்து இருந்து பார்ப்போம். அடுத்த இதழில் மாற்றம் உண்டா என்று.

said...

தாசன் இதன் ஆசிரியர் செந்தில்வேலவர் என்பவர் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவர் பத்திரிகை ஆரம்பிக்க முடியாது என்பதால் தமது மகளின் பெயரில் எழுதுகிறார். இவர் சக்தி டீவியில் பத்திரிகைச் செய்திகளை கல்லு ரோட்டில் மாட்டுவண்டில் போவதுபோல் தாறுமாறாக வாசிப்பார்.

ஜோகன் பாரிஸ் கூறியதுபோல மல்லிகையைத் தவிர வேறு எந்த சஞ்சிகையும் நிலைக்கவில்லை( சிரித்திரன் விதிவிலக்கு ஆனால் சுந்தரின் மறைவுக்குப் பின்னர் வெளிவரவில்லை. ). ஞானம் சஞ்சிகை மல்லிகைபோல் இல்லையென்றாலும் சில கட்டுரைகள் எரிச்சலைத் தருகின்றன் காரணம் திரும்ப திரும்ப பழைய பல்லவிகள்.

Anonymous said...

thasan sir,i saw amutham. fentastic. birrliyan job by senthilvelavar and satheeskumar. we have to wish them. do not discourage them. this is the first time a tamil magazine like this. we thank to you to promote them through your website. m.m.mohaideen

Anonymous said...

Mr.Thasan, Amutham Editor Senthil and Sathees are like politicians. Sathees with Minister Karu jayasooriya and senthil(CIA) is behaind Minister Milinda Moragoda. now they are trying to contest parliament elections in Colombo and Jaffna. That is the only reson they are doing this magazine not like our Elayathambi Dayanantha, Editor of Irukkirom. - Suhanja from Colombo - 06

said...

அமுதம் தொடர்பாக அனாமி சுகன்யா வெளியிட்ட கருத்துக்கள் மிகச் சரியானவை. (எல்லா அனாமி என்பவர்கள் அடையாளம் காட்டமுடியாதவர்கள் இல்லை. சிறிலங்கா (இந்திய மத்திய அரசு, அமெரிக்க உளவாளிகளுக்கு மத்தியில்) திருநாட்டில் கருத்துகளை வெளியிடுவது கடினம் என்பதையும் உணர்ந்ததுகொள்ளுங்கள்) அமுதம் எழுத்துவடிவிலும் மட்டுமல்ல இலட்சனையில் கூட பிரதிதான். மேலதிகமாக ஒரு ஓழுங்கமைக்கப்பட்ட வடிவமைப்பு இல்லை. இருக்கிறம் சஞ்சிகை அதில் பறவாயில்லை. அமுதம் திருந்துவார்க்ள என்பதை எதிர்பார்காதிர்கள். நடக்காது. அவர்கள் வெளிவருகின்ற கொள்கை வேறு. மோகைதீன் அவர்களே, அதில் என்ன பன்டாஸ்டிக் என்கின்ற அளவிற்கு இருக்கு,? மல்லிகை இலக்கிய சஞ்சிகை. என்னைப்பொறுத்த வரை இருக்கிறம் அமுதம் என்பவை ப்றறி நாங்கள் பேசிக்கொள்வது சரி. மல்லிகையை பொழுது போக்கு சஞ்சிகைகளுடன் ஒப்பிடாதீர்கள். மற்றும்படி எங்கள் தமிழ் மக்களின் குறிப்பிடத்தக்க விடயம் எதையும் செ்யவதில்லை. யாராவது ஒன்றைத் தொடக்கினால் உடனே அதற்கு போட்டியாக அதே தொழில் தொங்குவது. இதற்கு நல்ல உதாரணம் வெள்ளவத்தையில் உள்ள தொலைதொடர்பகங்கள். வெளிநாட்டு பணத்தில் பல லட்சங்க்ள கொட்டி தொடங்கிவிட்டு அடிமட்ட விலையில் அனைத்தையும் செய்து பின் நட்டத்தில்.... உதாரணம் 1 வருடங்களுக்கு முன் சிடி கொமினிகேசனில் 2 ருபாய்க்கு போட்டோ பிரதி எடுக்கலாம். இன்று கடை வேறு ஒருவரிடம். வெள்வவத்தையில் 3 ருபாய் போடா கோப்பி பப்பலபிட்டி தெகிவளையில் 6ருபா. (ஆனால் இனவாத கட்சி ஜேவிபிஇன் தீவிர ஆதரவாளர்களான வெள்வத்தை நடைபாதைவியாபாரிகளிடம் தமிழ் மக்கள் அறாவிலைக்கு கொடுக்கும் பணம்.. அது வேறு கதை..)அடுத்தது நகைக்கடை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மற்றது கொப்பியடிக்கும் குணம். மலாயன் கபே, போதீஸ், ஜெயச்சந்திரன், அ(கு)முதம், இலங்கை விகடன்( முடியல்ல) என்று பல. மற்றும் படி தமிழர்களின் இன்னொரு சிறப்பு தமிழர்கள்கு மட்டுமே யான அவர்களின் சந்தை. (நான் குறிப்பிடுவது தமிழர்கள செய்யும் வியாபாரங்கள் அதிகமானவை வாடிக்கயாளர்களாக தமிழர் களையே கொண்டிருக்கும். மற்றும்படி... சொல்ல நிறைய இருக்கு யார் இதை வாசிப்பார்கள் யார் இதை உணருவார்கள்...

Anonymous said...

Mr.Venkandan, I read your comment. very good. very very good. If there is a person like you all Tamils will happy. I think you have mental(visar) problem. better go and see a mental doctor. - Ragavan