இலங்கையில் புத்தக திருவிழா

எதிர் வரும் 8ம் திகதி தொடக்கம் 16ம் திகதி வரை இலங்கையில் மாபெரும் புத்தக திருவிழா ஒன்று இடம் பெறவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மணடபத்தில் இடம் பெறவுள்ளது.


இன் நிகழ்வில் இலங்கையில் உள்ள பல புத்தக நிலையங்கள் இங்கே புத்தங்களை விற்பனை செய்யவுள்ளனர்

இவ் புத்தக திருவிழாவிற்க்கு 12 அனுசரணையாளர்கள் உறுதுணையாக விளக்கவுள்ளனர். இதன் பிரதான அனுசரணையாளராக குணசேன நூல் வெளியீட்டு நிறுவனம் விளங்கின்றனர்

மொத்தம் 350 விற்பனை கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 40தொடக்கம் 50வரையான விற்பனை கூடங்களை வெளிநாட்டு நூல் வெளியீட்டளர்கள் அமைக்கவுள்ளனர்.

இவ் புத்தக திருவிழாவை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை கல்வியமைச்சு பாடசாலை நூலகங்களுக்கு புத்தங்களைவங்குவதற்க்கு 6கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.
எனவே இத் புத்தக திருவிழாவில் வருமானம் மொத்தமாக 10 கோடி ரூபாவை தாண்டும் என எதிர்பார்க்கபடுகின்றது.

8 comments:

said...

மணிமேகலை பிரசுரத்தார் முன்னனியில் நிற்பார்களே..

said...

நிச்சயமாக அவர்களின் புத்தங்கள் கூடுதலாக விற்பளை ஆகும் அல்லவா

said...

ராதுகா பதிப்பகத்தின் ரஷ்ய மொழிபெயர்ப்புக்களைத்தேடிக்கொண்டிருந்தேன்.இங்காவது கிடைக்கிறதா என்று பார்ப்போம்

said...

சென்னையில் உள்ள நியூ சென்சுரி புக் ஹவுஸ்,சுரா பதிப்பகமும் பூபாலசிங்கம் புத்தக நிலையத்துடன் ஊடாக தங்களின் நூல்களை காட்சிப்படுத்துகின்றது. ராதுகா பதிப்பகத்தின் நூல்கள் சில வேளை காட்சிப்படுத்துவார்கள்.

said...

மணிமேகலைப் பிரசுர வியாபாரி ரவி தமிழ்வாணன் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருவதில்லை. அவர் கம்பன் கழக விழாக்களுக்கு மட்டும் வந்து 5 அல்லது 6 மடங்கு விலையில் புத்தகம் விற்பார். ராதுகா பதிப்பக புத்தக்ங்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் காட்சியகத்திலும் சேம மடு பொத்தக்சாலையிலும் பெற்றுக்கொள்ளாலாம்.

said...

//மணிமேகலைப் பிரசுர வியாபாரி ரவி தமிழ்வாணன் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருவதில்லை. அவர் கம்பன் கழக விழாக்களுக்கு மட்டும் வந்து 5 அல்லது 6 மடங்கு விலையில் புத்தகம் விற்பார்.//

நெத்தியடி வசனங்கள் வித்யா..தவிர ராதுகா பதிப்பக நூல்கள் தொடர்பான தகவலுக்கும் நன்றி..அது சரி நீங்களும் கொழும்பில் இருந்தா பதிகின்றீர்கள்?

said...

வாசிக்க விரும்பும், வசதிகுறைந்தோரும் வாங்கும்படி விலைகள் வைப்பார்களானால் பயன் அதிகம்

said...

எல்லோரின் வசதிக்கு தான் இந்த எற்பாடு. யோகன். எதோ ஒரு பழ மொழி இருக்கின்றதே.''காற்று உள்ள போதே துர்த்தி கொள்'' என்று. நான் சொன்னது சரியா?