மல்லிகை "தமிழச்சியும்" மெட்ரோ நியூஸ் "ஜெஸிலாவும்"

வலைப்பதிவாளர்களையும் வலைப்பதிவுகளையும் அறிமுகப்படுத்தும் படலங்களை இப்போது சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் தொடங்கியுள்ளன போலும். இலங்கையில் இருந்து கடந்த ஐம்பது வருடங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் மல்லிகையின் இந்த வருட ஒகஸ்ட் இதழில் “மின்வெளிதனிலே” என்னும் இணையத்தளங்ளை அறிமுகம் செய்யும் பக்கத்தில் தமிழச்சியின் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் வந்திருக்கின்றது. இந்த பக்கத்தினை எழுதுபவர் மேன்மகவி என்பவர். தமிழச்சி பற்றிய அறிமுகம், புகைப்படம் என்பனவற்றோடு வந்திருக்கும் இவ்வறிமுகம் தமிழச்சியின் வலைப்பதிவில் உள்ள பெரியாரின் கருத்துக்களை மொத்தமாக ஐந்து பக்கங்கள் வரை எழுதப்பட்டிருக்கின்றது.

தவிர அகர வரிசையில் தொடங்கும் சில வலைப்பதிவுகளையும் மல்லிகை வெளியிட்டு இருந்தது. அந்த மல்லிகை இதழ் கைவசம் இல்லாத காரணத்தினால் யாருடைய வலைப்பதிவுகள் பற்றி வந்திருந்தன என்று சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இன்றைய “மெட்ரோ நியூஸ்” பத்திரிகையில் ஜெஸிலாவின் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் வந்திருக்கின்றது. “மெட்ரோ நியூஸ்” என்பது இலங்கையின் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமான வீரகேசரியின் நகரப்பதிப்பாகும். “மெட்ரோ நியூஸ்” இவ்வாறு வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் வேலையை நெடுநாளாக செய்து வருகின்றதா? அல்லது இன்றுதான் தொடங்கியிருக்கின்றா என்று தெரியவில்லை. ஏன் என்றால் நான் இன்றுதான் “மெட்ரோ நியூஸை” முதன் முதலில் எடுத்திருக்கின்றேன

20 comments:

said...

சகோதரியின் வலைப்பதிவு அறிமுகம் வந்ததில் சந்தோஷம், நெடு நாளாய் இந்தப் பணியை மெட்ரோ நியூஸ் செய்வதாக அறிந்தேன், ஏனென்றால் 2 மாதம் முன் நான் எழுதிய விளையாட்டுப் போட்டி பதிவும் வந்திருந்தது.

அது சரி வளைகுடாவில் எப்படி மெட்ரோ நியூஸ் கிடைக்கிது?

said...

நல்ல செய்தி.

தமிழச்சி மற்றும் ஜெஸிலா இருவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி.

said...

தாசன் வீரகேசரி இதைக்கொஞ்சநாளாகத்தான் செய்து வருகிறது... ஏனெனில் தமிழகப்பத்திரிகை விகடனில் இப்போது கொஞ்சநாளாகத்தானே விகடன் வரவேற்பறை வருகிறது...

said...

நன்றி கானாப்பிரபா..

//அது சரி வளைகுடாவில் எப்படி மெட்ரோ நியூஸ் கிடைக்கிது? //

நான் ஏற்கனவே எனது அறிமுகப் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களிலேயே குறிப்பிட்டு இருக்கின்றேனே..தற்போது விடுமுறையில் இலங்கையில் இருப்பதாக..

said...

//மாசிலா said...
நல்ல செய்தி.

தமிழச்சி மற்றும் ஜெஸிலா இருவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி.//

பின்னூட்டத்திற்கு நன்றி மாசிலா

said...

// த.அகிலன் said...
தாசன் வீரகேசரி இதைக்கொஞ்சநாளாகத்தான் செய்து வருகிறது... ஏனெனில் தமிழகப்பத்திரிகை விகடனில் இப்போது கொஞ்சநாளாகத்தானே விகடன் வரவேற்பறை வருகிறது... //

kindaluu ;0

said...

//த.அகிலன் said...
தாசன் வீரகேசரி இதைக்கொஞ்சநாளாகத்தான் செய்து வருகிறது... ஏனெனில் தமிழகப்பத்திரிகை விகடனில் இப்போது கொஞ்சநாளாகத்தானே விகடன் வரவேற்பறை வருகிறது...//

ஹாஹா..நீங்கள் சொல்வது மெட்ரோ நியூஸ் விசயத்தில் சரியாக இருக்கும் போல தான் இருக்கிறது. ஆனால் மல்லிகையில் வந்தது அப்படி இருக்க வாய்ப்பில்லை. தவிர மேன்மகவி அப்படிச் செய்து தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளமாட்டார் என நினைக்கின்றேன்.

said...

நல்ல செய்தி. தகவலுக்கு நன்றி
----------------------------
இலங்கைப்பதிவர் பட்டியல் ஒன்றைப்பதிந்துள்ளேன் ஒருக்காசரிபாருங்கள் அண்ணா
http://palipedam.blogspot.com/

said...

தகவலுக்கு நன்றி தாசன்.

said...

//மாயா said...
நல்ல செய்தி. தகவலுக்கு நன்றி
----------------------------
இலங்கைப்பதிவர் பட்டியல் ஒன்றைப்பதிந்துள்ளேன் ஒருக்காசரிபாருங்கள் அண்ணா
http://palipedam.blogspot.com/ //

மாயா உங்களின் பதிவை நீங்கள் போட்டவுடனேயே பார்த்துவிட்டேன். வவுனியாவில் இருந்து வவுனியாத்தமிழ் என்னும் பெயரில் இலங்கேஸ்வரன் என்னும் பெயரில் பதிகின்றார். அதே சு.முரளிதரன் என்பவரும் பதிகின்றார். கீழே அவரது சுட்டி
www.muralitharanlive.blogspot.com

said...

// ஜெஸிலா said...
தகவலுக்கு நன்றி தாசன்//

பின்னூட்டத்திற்கு நன்றி ஜெஸிலா :)

said...

நன்றி

said...

metro news இது நீண்டகாலமாக விளம்பர நோக்கமற்று வெளிவருகின்ற தளங்களை அறிமுகப் படுத்திவந்தது இணையம் வைத்திருப்போரை தங்களுக்கு விபரங்களை அனுப்புமாறு கோரியும் வந்தது நான் இலங்கையில் உள்ள போது இரு தடவைகள் அனுப்பினேன் ஆனால் பிரசுரிக்க படவில்லை

said...

//தமிழ்பித்தன் said...
நான் இலங்கையில் உள்ள போது இரு தடவைகள் அனுப்பினேன் ஆனால் பிரசுரிக்க படவில்லை //

nalla velai seythaangal ;))))

said...

// கானா பிரபா said...
//தமிழ்பித்தன் said...
நான் இலங்கையில் உள்ள போது இரு தடவைகள் அனுப்பினேன் ஆனால் பிரசுரிக்க படவில்லை //

nalla velai seythaangal ;)))) //

அதென்ன கானாப்பிரபா தமிழ்பித்தனின்ரைய போடமால் விட்டதில உங்களுக்கு அவ்வளவு சந்தோசம் :)

Anonymous said...

மெட்ரோ நியூஸ் என்ற பெயர் இங்கு உபயோகிக்கப்பட்டதால் இந்த பதிவை மேற்கொள்ளலாம் என்ற எண்ணம் உதித்தது. கானா பிரபாவின் கட்டுரையை வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் வலைப்பதிவு பக்கம் மூலம் பிரவேசித்துப்பெற்றேன். சுவராஸ்யமாக இருந்ததால் பிரசுரிக்கவேண்டுமென்ற ஆவல் பிறந்தது. மேலும் ஒரு விளையாட்டுப்போட்டி நிகழ்வை இப்படியும் வர்ணிக்கலாமோ என்று வியப்பு ஏற்பட்டது.
இனி மெட்ரோ நியூஸ் பற்றி......

இளைஞர் குழாத்திற்கென உருவாக்கப்பட்ட பத்திரிகை மெட்ரோ நியூஸ். இதில் விளையாட்டு ,சினிமா,அறிவியல் ,பெஷன் ,என தகவல்கள் பரவிக்கிடந்தாலும் அரசியல் குறைவு. வெளிப்படையாகக்கூறப்போனால் இப்பத்திரிகையில் இளமைத்துள்ளல் சற்று அதிகம். அந்த வகையில் தினசரி பத்திரிகையாக 5 ரூபாவுக்கும் வாரப்பத்திரிகையாக (வெள்ளிக்கிழமைகளில்)
15 ரூபாவுக்கும் இப்பத்திரிகை வெளிவருகிறது. இலங்கையில் தற்போது 5ரூபாய்க்கு கிடைக்கும் ஒரே தினசரி மெட்ரோ நியூஸ் மட்டுமே. வலைப்பதிவுகளை பத்திரிகையில் அறிமுகப்படுத்தி அவர்கள் மூலம் பத்திரிகை வாசகர்களையும் வலைப்பதிவாளர்களையும் இணைக்கும் எமது முயற்சிக்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது .உண்மையைக்கூறப்போனால் வலைப்பதிவு என்ற வாசகத்தை இலங்கையில் உள்ள எத்தனைப்பேர் தான் (குறிப்பாக தமிழர்கள்) அறிந்திருப்பார்களோ என்று கூறினால் மிகையாகாது .புலம்பெயர்ந்த உறவுகள் மூலம் வலைப்பதிவுகள் இன்று எமக்கு எவ்வளவோ விடயங்களை தருகின்றன ஆனால் கணணிவசதி உள்ளவர்கள் மட்டுமே இவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் எமது தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு பத்திரிகையின் மூலம் மட்டுமே சில விடயங்களை கொண்டு செல்ல முடியும். ஆகவே வலைப்பதிவாளர்களே நீங்கள் எமக்கு இலவசமாக பல விடயங்களைப்பெற்றுத்தருகிறீர்கள். அவற்றை பிரசுரம் செய்வதில் எதுவும் சிக்கல்கள் இருக்கின்றதா என்று கூறவும். (மெட்ரோ நியூஸ் இலங்கை முழுதும் விநியோகிக்கப்படுகிறது)

இப்படிக்கு சிவலிங்கம் சிவகுமாரன்
வீரகேசரிஃ மெட்ரோ நியூஸ்

Anonymous said...

மெட்ரோ நியூஸ் இலங்கை பத்திரிகைத் தமிழை நாசமாக்க வந்திருக்கும் பத்திரிகை. ஆங்கிலம் கலந்து மோசமான தமிழுடன் வெளிவரும் ஒரே இலங்கைப் பத்திரிகை மெட்ரோ நியூஸ் தான்

said...

தவறு அனானி அவர்களே முதலில் உங்கள் சுயத்துடன் எழுதுங்கள் அனானியாக கருத்துச் சொல்வது நல்லதல்ல. மெட்றோ நியூஸ் ஆங்கிலம் கலந்து வந்தாலும் அதில் பல நல்ல விடய்ங்கள் வருகின்றன. அமுதம் என்ற அப்பட்டமான குமுதத்தின் கொப்பியைப் போல் அல்லாமல் மெட்றோ தனித்தன்மையுடன் வெளிவருகின்றது. பல ஆயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்ட பத்திரிகை இது.

ப்ரியா போன்ற பத்திரிகைகளை விட இது எத்தனையோ மடங்கு சிறந்த பத்திரிகை.

said...

வணக்கம். ஜே போல ஒரு ஆங்கில மோகம் கலந்த பத்திரிகைதான் மெட்ரோ. இதில் எந்த சந்தேகமும் இல்லை. மெட்ரோ நியுஸ் ஒரு மிகக் கேவலமான எண்ணத்துடன் வெளிவந்துள்ள பத்திரிகை. இதில் எந்த வித மாற்றுக் கருத்தும் கிடையாது. வீரகேசரியின் பலத்திற்கு வியாபார ரீதியில் தினக்குரலுடன் அது செய்யும் கேவலமான விளம்பர போட்டியே உதாரணம். மெட்ரோ நியுஸ் வெளிவரக் காரணம் தமிழ் வாசகர்களுக்கு இரண்டாவது பத்திரிகையாகவும் தாங்கள் தான் இருக்க வேண்டும் என்ற மிகக் குறுகிய கேவலமான புத்திதான். வேறு எந்த காரணமும் இல்லை. இவர்களால் கணனி, விவசாயம் என்று புது புது இதழ்களை வெளியீட்டு அதை புகழ் பெறச் செய்யமுடியதவர்கள. (ஆனந்த விகடன் குமுதம் கூட வியாபார நோக்குடன் இலவசமாகவும் பின்னர் காசுக்கும் விற்கும் வியாபாரம் தான்)ஐந்து ருபாவிற்கு மெட்ரோ நியுஸ் விற்கும் இவர்கள் வீரகேசரியை மலிவாக விற்க முடியுமா? இவர்களால் அது முடியாது. என்னைப்பொறுத்த வரை மெட்ரே நியுஸ் ஒரு ஆங்கில மோகம் கொண்ட முற்றிலும் வியாபார நோக்குடன் வரும் பத்திரிகை. ஒரு குறுகிய எண்ணத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகை. சமீபத்தில் என்னை மனவருத்தமடைய செ்யத இன்ாருவிடயம் தமிழ் தமிழ் என்று சம்மபாதிக்கும் இவர்கள் வெளியிட்ட டயரியில் புத்த சின்ன மான சந்திரரவட்டக்கல். எங்கள் தலையை அதில் கொண்டுதான் முட்ட வேண்டும். அதற்கு முன் குமார் நடேசனின் தலையை கொண்டு கொஞ்சம் ஓங்கி முட்ட வைக்க வேண்டும். இலங்கையின் தலைசிறந்த பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரான இவருக்கு தமிழ் வாசிக்க தெரியது என்பது சிறப்புத் தகமை. ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்க்ள் ஆசிரியர்கள் பணி உண்மையிலே சிறந்தது. ஆனால் 2 பகுதிகளாக இயங்கும்(ஞாயிறு மற்றும் தினம்) விரகேசரியில் பொறுப்பான ஆசிரியர் பற்றி அலுவலகத்தில் கேட்டால் தெரியும். அல்லது அவரைக் கண்டால் கேட்கவும் அவரைப்பற்றி என்ன வீரகேசரி மதிலில் எழுதி ஒட்டி அதை கிழித்தார்கள் என்று? இன்று தமிழ் தேசியத்திற்கா எழுதி வியாபாரம் செய்யும் இவர்கள் மட்டக்களப்பில் அனைத்து தமிழ் பத்திரிகைகளும் தடைசெய்பப்பட்ட போது மட்டக்களப்பின் முன்னாள் தலைவர்(இப்போது இங்கிலாந்தில் 2 வருட கடும் காவல் விசா பெற்றிருக்கும் கரு-நா) அவருடன் கதைத்து வீரகேசரியை மட்டும் விற்க அனுமதி வாங்கியவர் தலைவரின் பெயரைக் கொண்ட பத்திரிகை ஆசிரியர் தான். தமிழனின் ஒற்றுமைக்கு இது ஒரு உதாரணம். அனைத்துப் பத்திரிகைகளும் தடைசெய்யப்பட்டிருக்கும் போது தனக்கு மட்டும் அனுமதி வாங்கியவர் தினசரி வீரகேசரியின் ஆசிரியர். மேலும் ஒரு உதாரணம் வீரகேசரியில் விற்பனைக்கு இருந்த வெப் அச்சு இயந்திரம் (வெப் என்றால் ஒரேயடியாக 10. 20 பக்கங்கள் அடித்து மடித்து அனுப்பும் அச்சு இயந்திரம்) விற்றால் தினக்குரல் அல்லது வேறு ஏதாவது ஒரு பத்திரிகை நிறுவனம் அல்லது இரும்புக்கு விற்கும் திட்டம் இருந்தது. காரணம் வேறுயாரும் வாங்கி அதை வைத்து பத்திரிகை தொடங்கக் கூடாது என்ற தமிழரின் பரந்த மனப்பான்மைதான். இய்திரத்திற்க என்ன நடந்தது என்று அறிய ஆவலாக இருக்கிறதா? உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கும்

said...

வணக்கம் தாசன் அண்ணா.
நான் மெட்ரோ ஊடகவியலாளராக பணிபுரிந்தேன் என்ற வகையில் சில பதிவுகளைப் பார்க்கும் போது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த மெட்ரோ நாளிதழ் வெளிவரத்தொடங்கிய காலம் முதலே இணையத்தள அறிமுகம் இருக்கிறது. அண்மையில் தான் வெப்சைட் எனப் பெயர்மாற்றி பிரசுரமாகிறது.
அனானியாக வந்து சொல்லும் தைரியமற்றவர்களின் கருத்தை ஒரு கருத்தாகவே ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலம் கலந்து வெளிவருகின்ற போதிலும் அந்தப்பத்திரிகையின் நோக்கம் தமிழை கொலை செய்வதல்ல. நல்ல தரமான விடயங்கள் வெளிவருகின்றன. ஏன் அதை சுட்டிக்காட்ட தவறுகிறீர்கள்?
வெங்கடன் தனது பதில்இடுகையின் முற்பகுதியில் கூறியுள்ளவற்றை(மட்டும்)நான் மறுக்கிறேன். முகாதைத்துவத்திலுள்ளவர்களால் தமிழ்வாசிக்கத்தெரியாததால் அங்குள்ளவர்களின் திறமைகள் வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. எவ்வளவுதான் உயிரைக்கொடுத்து பகிரங்கமாக சில விடயங்களை வெளிக்கொண்டுவந்தாலும் முகாமைத்துவம் அவற்றை கணக்கெடுப்பதில்லை. ஆசிரியரினதும் வாசகர்களினதும் முழுமையான பாராட்டுதல்களின் பின்னணியில்தான் எழுதவேண்டியுள்ளது.
ஆசிரியர் மீதோ ஆசிரியபீடத்திலுள்ளவர்கள் மீதோ தமிழ்க்கொலைக் குற்றச்சாட்டை சுமத்துவதை கடுமையாக எதிர்க்கிறேன்.

//இலங்கையில் தற்போது 5ரூபாய்க்கு கிடைக்கும் ஒரே தினசரி மெட்ரோ நியூஸ் மட்டுமே. //

நான் வாங்கும்போது10 ரூபா ஐயா.